“எங்களுடன் War செய்ய அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது”.. அமைச்சர் டிஆர்பி ராஜா கொடுத்த பதில்!
சென்னை: "திமுக தகவல் தொழில்நுட்ப அணியுடன் War செய்யும் அளவுக்கு, அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது" என திமுக ஐடி விங் மாநில செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து திமுக ஐடி விங் - அதிமுக ஐடி விங் இடையே காரசாரமான கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஓரணியில் தமிழ்நாடு
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திமுகவில் உறுப்பினர்களை இணைப்பதற்கான 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் செயல்பட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் 'ஓரணியில் தமிழ்நாடு' செயலியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், 2 கோடி மக்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதை எளிதாக்குவது குறித்தும் காணொளி வாயிலாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
டிஆர்பி ராஜா பேட்டி
அதனைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்தும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
நூற்றாண்டு காலம் கடந்து செல்ல இருக்கும், இந்த இயக்கத்தை புதுப்பிக்க நினைக்கிறார் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் விளைவாக, டீக்கடை முதல் ட்விட்டர் வரை இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பயணித்து இருக்கிறது.
இந்த பயணம் வழியாக தமிழ் இனத்திற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக, தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டிற்காக நிற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியை, இந்த உறுப்பினர் முகாமின் மூலம் மக்களிடையே சேர்க்க உள்ளோம்.
துரோகிகளை வெளிச்சம் போட்டு காட்டுவோம்
234 தொகுதிகளிலும் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், 27 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் மிக பிரம்மாண்டமாக 'ஓரணியில் தமிழ்நாடு' செயலி குறித்த பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கை மட்டும் அல்லாமல் திமுக அரசின் திட்டங்கள் சரியான அளவில் சென்றடைந்துள்ளதா? என ஆராய்ந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் இருக்கும்.
இனத்தை எதிர்த்துவரும் எதிரிகளையும், இனத்திலேயே இருந்து கொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்கும் பயணத்தில் திமுக இறங்கியுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதை பற்றி பட்டித்தொட்டி எல்லாம் தெரிவிக்க உள்ளோம். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டப் போகிறோம்.
இந்த 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் தலைவராக இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 3ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறோம்" எனத் தெரிவித்தார்.
அதிமுக ஐடி விங்குக்கு தகுதி இல்லை
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா. அதிமுக ஐடி விங் vs திமுக ஐடி விங் இடையே சமூக வலைதளத்தில் நிலவி வரும் கருத்து மோதல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா, "எங்களுடன் War செய்ய அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது" எனத் தெரிவித்தார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications