மேலிட சிக்னலா?.. ஆளுநர் ரவியை இன்று சந்திக்கிறார்கள் அதிமுக மாஜிக்கள்.. என்னவா இருக்கும்..?

ஆளுநர் ரவியை சந்திக்கிறது அதிமுக சட்ட ஆலோசனைக்குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ரவியை இன்று அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே, அதிமுகவில் நிறைய மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தன.. அதில் ஒன்றுதான், கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக தலைமையானது ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தது.

அதன்படி, அதிமுக மீது தொடுக்கப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள அதிமுக சார்பில், 6 பேர் கொண்ட "கழக சட்ட ஆலோசனை குழு" அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

 6 பேர் குழு

6 பேர் குழு

இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.. அதில், ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்கு புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால், கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை, சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் கழக சட்ட ஆலோசனை குழு அமைக்கப்படுவதாகவும் அதில் தெரிவித்திருந்தனர்.

 பொய் வழக்குகள்

பொய் வழக்குகள்

மேலும், இந்த குழுவில், டி.ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்றும், இந்த 6 பேரும், நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு இந்த கழக சட்ட ஆலோசனைக்குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் என்றும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

 சந்திப்பு

சந்திப்பு

இந்நிலையில், சமீப காலமாகவே அதிமுக பிரமுகர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.. சில சீனியர்கள் வீடுகளில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன.. ராஜேந்திர பாலாஜியை காணவில்லை.. ஏற்கனவே உட்கட்சி பிரச்சனையில் சிக்கி தவிக்கும் அதிமுகவில், நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளும் சூழ்ந்து வருகின்றன.. இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழக ஆளுநர் ரவியை இன்று அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்திக்க போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது..

 பரபரப்பு

பரபரப்பு

இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.. இவர்கள் எதற்காக ஆளுநரை சந்திக்க போகிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.. எனினும் இந்த குழு ஆளுநரை சந்தித்து பேசுவது, தமிழக அரசியலில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+