கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து பா.வளர்மதி போட்டி? முக்கிய இலாகா? எடப்பாடி பழனிசாமி வியூகம்!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியை நிறுத்தலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவுறும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மிகவும் முக்கியமானது.

அதிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இந்த முறை வேட்பாளர்கள் தேர்விலும் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டும் என தெரிகிறது.
மேலும் தேர்தல் அறிக்கையையும் மக்களை கவரும் வகையில் தயார் செய்யப்படும் என தெரிகிறது. திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு அதிமுகவும் இது போன்ற திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கொண்டு வர முனைப்பு காட்டுகிறதாம்.
பிரதமர் நரேந்திர மோடி
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது பெண்களுக்கு மாதம் ரூ 2500, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துமாறும் நிதியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளாராம்.
தேர்தல் அறிக்கை
எனவே அதிமுகவுக்கு நிதி குறித்து கவலை இல்லை என்பதால் தேர்தல் அறிக்கையை எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். சரி!வேட்பாளர் என வரும் போது வலிமையான நபர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாம் அதிமுக.
ஆதிராஜாராம் என்ன ஆனார்
அதிலும் இந்த தேர்தலில் எப்படியாவது முதல்வர் ஸ்டாலினை தோற்கடிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜாராம் களம் கண்டார். ஆனால் ஸ்டாலின் பெற்ற 1.05 லட்சம் வாக்குகளில் 50 சதவீதத்தை கூட அவரால் பெற முடியவில்லை.
ஸ்டாலினுக்கு கடும் போட்டியாளர்
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் ஸ்டாலின். அவரை தோற்கடிக்க இந்த முறை tough contestant -ஐ களத்தில் இறக்க எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறாராம்.
எஸ்ஐஆர் பணிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியில் (எஸ்ஐஆர்) முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் போட்டியிடுவாரா
எஸ்ஐஆருக்கு ஆரம்பத்திலிருந்தே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். ஒரு வேளை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மகளிரணி செயலாளருமான பா.வளர்மதியை நிறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம்.
விருப்பமனு
எனினும் அண்மையில் நடந்த விருப்ப மனு நிகழ்வில் பா. வளர்மதி, ஆயிரம்விளக்கு அல்லது மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து விருப்பமனு கொடுக்குமாறு வளர்மதியிடம் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஆதி ராஜாராம் இந்த முறை கொளத்தூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுக்கவில்லையாம்.
பா.வளர்மதியின் முதல் தேர்தல்
பா.வளர்மதி, 1984 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் 2001 ம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
2006 ஆம் ஆண்டு ஆலந்தூரில் போட்டி
2006 ஆம் ஆண்டும் ஆலந்தூரில் போட்டியிட்ட வளர்மதி தோல்வியடைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு 2011 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தார்.
2016 இல் நடந்த தேர்தல் முடிவு
2016ஆம் ஆண்டு அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி தோல்வியடைந்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கேபினெட் அமைச்சர் பதவிக்கு இந்த பாடநூல் கழகத் தலைவர் பதவி சமம் ஆகும்.
பா. வளர்மதிக்கு அமைச்சர் பதவி
2021 ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் திமுகவின் தா.மோ. அன்பரசனை எதிர்த்து வளர்மதி போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனவே இந்த முறை வளர்மதி கொளத்தூரில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை ஸ்டாலினை தோற்கடித்து அதிமுக ஆட்சி அமைந்தால் பா.வளர்மதிக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications