அதிமுக + நாம் தமிழர்.. உருவாகுதா புதிய மெகா கூட்டணி? வேற யாரும் இல்லையாமே.. எடப்பாடி திட்டம்?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. லோக்சபா தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இந்த புதிய கூட்டணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக - பாஜக கூட்டணியை முறிப்போம் என்று அதிமுக அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை மற்றும் சட்டசபை தேர்தலை ஒன்றாக சந்தித்த அதிமுக - பாஜக கூட்டணி ஒரு வழியாக முறிந்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசி வந்ததால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களை இகழ்ந்து பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிந்துள்ளது. இதற்கு முன்பே அண்ணாமலை அதிமுக தலைவர்களை இகழ்ந்து பேசி உள்ளார்.
சில பாஜக தலைவர்கள்.. அதிமுகவை இதை விட மோசமாக இகழ்ந்து உள்ளனர். ஆனாலும் அப்போதெல்லாம் முறியாத அதிமுக - பாஜக கூட்டணி நேற்று முறிந்துவிட்டது. இதற்கு பின் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உதாரணமாக அண்ணாமலை பேச்சு, அண்ணாமலையை நீக்க அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொள்ளாதது, லோக்சபா தேர்தலில் பாஜக 20 இடங்களை கேட்டது. இவை எல்லாம் கூட்டணி உடைவதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்பட்டது.
புதிய கூட்டணி: இந்த கூட்டணி முறிவில் வேறு சில முக்கிய விஷயங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. முதல் விஷயம் - அதிமுக - பாஜக 2024 லோக்சபா தேர்தலை ஒன்றாக சந்திக்காது. அதிமுக பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இருக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக புதிய கூட்டணி அமைக்கும்.

அதாவது புதிதாக கூட்டணி அமைக்கப்படும். இதற்கு விரைவில் பெயரும் வைக்கப்படும். இந்த புதிய கூட்டணி எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது கேள்வியே.
அதிமுக வட்டார தகவல்கள்: அதிமுக வட்டாரத்தில் இது பற்றி விசாரித்ததில் புதிய கூட்டணி பெரும்பாலும் திமுகவிடம் இருந்து சில கட்சிகளை பிரித்து உருவாக்கப்படும் என்கிறார்கள். அதாவது பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது விசிக அல்லது 2 கம்யூனிஸ்டுகளை பிரிக்க அதிமுக முயலும்.
லோக்சபா தேர்தலில் இவர்களுக்கு குறைந்த இடங்களை கொடுக்க திமுக நினைக்கும் பட்சத்தில் அப்படியே இவர்களை தூக்க அதிமுக பிளான் போடும் என்கிறார்கள். ஆனால் இவர்கள் கூட்டணி மாற வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
முக்கியமாக காங்கிரஸ் அல்லது விசிக அல்லது 2 கம்யூனிஸ்டுகளை உடைக்கவே முடியாது. இவர்கள் எல்லாம் இந்தியா கூட்டணியில் உள்ளனர். இவர்கள் தனியாக தமிழ்நாட்டில் தனியாக அதிமுக கூட்டணியில் இருக்க வாய்ப்பே இல்லை. அதிமுக கூட்டணியை வைத்து திமுகவை பயமுறுத்தி திமுகவிடம் கூடுதல் சீட் வேண்டுமானால் வாங்குவார்களே ஒழிய திமுகவுடனான கூட்டணியை இவர்கள் முறிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
நாம் தமிழர்: இதனால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயற்சி செய்யலாம். சீமானும் எடப்பாடியை பெரிதாக கடிந்து பேசியது இல்லை. இப்போதும் கூட சீமான் அதிமுக - பாஜக கூட்டணி உடைப்பை வரவேற்று உள்ளார். அதோடு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் கூறி உள்ளார்.
ஆனால் சீமான் - எடப்பாடி ஒரு புரிதலுக்கு வந்து அதிமுகவுடன் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் கூட உள்ளனர். நாம் தமிழர் வாக்கு வங்கி 5% வரை இருக்கும் பட்சத்தில் அது அதிமுகவிற்கு பாஜக கொடுத்த அதே பலத்தை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் எடப்பாடியும் நாம் தமிழர் கட்சியை உள்ளே இழுக்கவே பெரும்பாலும் முயலுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications