"எப்படி மிஸ் ஆச்சு.." கண்கள் சிவக்கும் எடப்பாடி.. உடனே பறந்த அழைப்பு.. இன்று முக்கியமான மீட்டிங்
சென்னை: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான ஆலோசனைகளை நடத்துவார் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றியை தவெகவினர் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். விஜய் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியை அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

விஜய்யின் வெற்றி ஒரு பக்கம் இருக்க.. எதிர்க்கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த அதிமுக இன்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் அதிமுக இழந்துள்ளது. கடந்த 2016 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த தேர்தலில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தனது வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது
இன்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்கான பின்னணிகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள சூழலில், அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான முடிவுகளை எடுக்கலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று கூறியிருந்தார். அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகே இந்த தகவலைப் பகிர்ந்திருந்தார். அதேநேரம் லீமா ரோஸ் தவெகவுடன் ஆலோசனை நடப்பதாகக் கூறியிருந்த நிலையில், இது தொடர்பாகவும் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications