எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன்.. திமுகவில் இணைந்த ஓபிஎஸ்சின் வலது கரம்!
சென்னை: ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியதில் இருந்தே அவரது ஆதரவாளராக மனோஜ் பாண்டியன் இருந்து வருகிறார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களில் மிக முக்கிய நபராக அறியப்பட்ட மனோஜ் பாண்டியன் சமீப காலமாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் வருகை தந்தார்.
சேகர் பாபுவின் காரில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை நடத்தி வரும் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் அவரது வலது கரம் போல செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்து இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதயை 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்த திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது மனோஜ் பாண்டியன் அக்கட்சியில் இணைந்து உள்ளார்.
திமுகவில் இணைந்த பின் மாலை 4 மணியளவில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். அதற்கேற்ப தலைமைச் செயலகம் வந்த மனோஜ் பாண்டியன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட சபாநாயர் அப்பாவு, அதன்பின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications