சட்டம் ஒழுங்கு.. பேச விடமாட்டேங்குறாங்க.. ஆவேசமாக வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்கட்சித்தலைவர் பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்பு செய்துள்ளனர்.
Recommended Video
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்த உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர்.

தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சலும் குழப்பமும் நேரிட்டது. சில நிமிடங்களில் சட்டசபையில் இருந்து எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இன்றைக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி சட்டசபையில் பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications