நேற்று வரை இருந்த "பெயர்".. பட்டென தூக்கிய எடப்பாடி.. பச்.. ஒரு இடம் விடாம ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி!
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் கையில் இருந்து அதிகாரங்கள் பல ஒவ்வொன்றாக அவரை விட்டு நழுவி செல்ல தொடங்கி உள்ளன. அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்னொரு முக்கியமான செயலை எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்டு இருக்கிறார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் 23ம் நிராகரிக்கப்பட்டன.
அதோடு அதிமுகவில் ஒற்றை தலைமையை அறிவிக்கும் பொதுக்குழுதான் உண்மையான பொதுக்குழு.. அந்த உண்மையான பொதுக்குழு ஜூலை 11ம் தேதிதான் நடக்கும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.

ஓபிஎஸ் அதிகாரமே
அதிகாரத்தின்படி ஓபிஎஸ்தான் பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்க முடியும். ஆனால் அன்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுத்தார். இது சட்டப்படி தவறானது ஆகும். அதேபோல அவைத்தலைவர் நியமனமும் தவறானதாக பார்க்கப்படுகிறது.

அவைத் தலைவர் நியமனம்
அதிமுக சட்டப்படி அவைத்தலைவர் நியமனத்திற்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி தரப்பினர் இதற்கு அளித்த விளக்கத்தில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் அவைத்தலைவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டனர். அதனால் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் இல்லை. பதவிகள் நியமனத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் இல்லை என்றனர்.

ஒப்புதல் அவசியமா
அதேபோல் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. கடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். ஆனால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால் அவரின் பதவி காலியாகிவிட்டது. எனவே பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. இப்படி வரிசையாக ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.

நீக்கம்
அந்த வகையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பெயர்தான் இத்தனை நாட்கள் இருந்தன. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவரின் பெயர்தான் நிறுவனர் என்ற இடத்தில் இருந்தது. தற்போது அந்த பெயர் நீக்கப்பட்டுள்ளது. நேற்று வரை இருந்த பெயர் நீக்கப்பட்டு இன்று அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு மொத்தமாக ஓ பன்னீர்செல்வம் குறித்த செய்திகள் எல்லாம் நீக்கப்பட்டு, அவருக்கு எதிரான செய்திகள் மட்டுமே அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழில் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications