சென்னையில் பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக பஞ்சாயத்து? ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்திக்க திட்டம்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்திருக்கும் நிலையில் சென்னையில் இன்று இரவு தங்கும் பிரதமர் மோடியை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஸ் இருதரப்பும் மாறி மாறி கட்சியினரை நீக்கி வருவதால் கடும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த களேபரத்தில் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவால் திறக்கப்பட்டது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறது. ஜனாதிபதி பதவிக்காக திரவுபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்த போது ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். ஆனால் அப்போது ஓபிஎஸ்-க்கு பிரதமர் மோடி தம்மை சந்திக்க அனுமதி தரவில்லை.
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற போது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அப்போதும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி, அமித்ஷா சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தமது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். மேலும் டெல்லி பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருப்பதாலே இபிஎஸ்ஸை சந்திக்க மறுக்கின்றனர் என்றும் சில தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இப்போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதன்பின்னர் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று இரவு மோடி தங்குகிறார். அப்போது சில முக்கிய பிரமுகர்களை மட்டும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இன்று தங்கும் பிரதமர் மோடியை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே சந்திக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது அதிமுகவின் உட்கட்சி மோதல் குறித்து இருதரப்பும் பரஸ்பரம் பிரதமர் மோடியிடம் விவரிக்க உள்ளனராம். பிரதமர் மோடி தலையீட்டுக்குப் பின்னராவது உட்கட்சி மோதல் ஓயுமா? என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications