அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டை உடைத்து கைப்பற்றினார் ஓபிஎஸ்! இபிஎஸ் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு!
சென்னை: அதிமுக பொருளாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி அணி பறித்துவிடக் கூடும் என்கிற நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைப்பற்றி உள்ளது. இதனைத் தடுக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இப்பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படும் நிலை உள்ளது.

இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும். இதனை சமாளிக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இன்று காலை முதலே ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினரோ ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடுவதைத் தடுக்க முயன்றனர். தொடக்கத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் பலருக்கு மண்டை உடைந்தது. ஒருவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இதன்பின்னர் ஓபிஎஸ் அலுவலகம் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. இதன்பின்னர் காட்சிகள் தலைகீழாக மாறின. அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி படங்கள் கிழித்து எறியப்பட்டன. அவரது ஆதரவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகப் பகுதி போர்க்களமாக காட்சி தருகிறது.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications