இது தப்புங்க.. அதிமுக கூட்டத்தில் கேள்வி கேட்ட நிர்வாகி.. உருவப்பட்ட வேட்டி.. மண்டை உடைப்பு- மோதல்!
சென்னை: அதிமுகவின் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பலர் ஆங்காங்கே மோதிக்கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவின் உட்கட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் 19 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
இரண்டாம் கட்டமாக இன்றும் நாளை, அதிமுக அமைப்பு ரீதியிலான 40 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

மோதல்
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது நேற்று ராணிப்பேட்டை அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை சோளிங்கரில் தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதிமுக துணை கொறடா சு.ரவி இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். நகர செயலாளர் தேர்வு தொடர்பாக இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதிமுக ஆலோசனை
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் சில மூத்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நகர செயலாளர் தேர்வில் ஜாதி ரீதியாக வேறுபாடு காட்டப்பட்டதாக நிர்வாகி ஒருவர் மேடையில் ஏறி நின்றி குற்றஞ்சாட்டினார். குறிப்பிட்ட ஜாதியினருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுவதாக அந்த நிர்வாகி குற்றஞ்சாட்டினார்.

அதிமு ஜாதி
அதிமுக துணை கொறடா சு.ரவி பாரபட்சம் காட்டுவதாக அந்த நிர்வாகி குற்றம்சாட்டினார். இதனால் கொதிப்பு போன அதிமுக துணை கொறடா சு.ரவி, அந்த நிர்வாகியை.. நீங்கள் உடனே கீழே இறங்குங்க. மேலே நிற்காதீங்க. என்று கோபமாக கத்தினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. கீழே இருந்த நிர்வாகிகள் சிலர் சட்டென்று மேலே ஏறி வந்து அந்த கேள்வி கேட்ட நிர்வாகியை பிடித்து கீழே தள்ளினார்கள்.

வேட்டி அவிழ்ந்தது
இதில் அவரின் வேட்டி அங்கேயே அவிழுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தில் சில நிமிடம் கைகலப்பு ஏற்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் கடலூர் பாதிரிகுப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இதேபோல் அதிமுக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று நடைபெற்று வந்தன. மனு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

உட்கட்சி மோதல்
அப்போது அங்கு மனு வாங்க கடலூர் நகர துணைச் செயலாளரான கந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அவரின் எதிர் கேங்கான எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியான குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் அங்கு மனு வாங்க வந்தனர். இதில் மனு வாங்குவதிலும், நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து தெரிவிப்பதில் இரண்டு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.

கைகலப்பு
சாதாரண கைகலப்பு அடிதடியில் முடிந்தது. இதில் 4 பேருக்கு மண்டை உடைக்கப்பட்டது. 6 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் இவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. இது தொடர்பாக தற்போது போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்!












Click it and Unblock the Notifications