அதிமுக உட்கட்சி தேர்தல் ஓபிஎஸ்- இபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு
அதிமுக உள்ளாட்சித் தேர்தல் டிச.7 அன்று நடக்கும் என்கிற நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தவிர யாரும் போட்டியிடாததால் வேட்புமனுவை பரிசீலித்து ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அறிவித்தார்.

ஜெயலலிதா மறைவு
அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப்பின் பல பிரச்சினைகளை சந்தித்தது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றார். முதல்வர் பிரச்சினையில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். டிடிவி துணைப்பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைப்பெற்று சிறைச்சென்றார்.

அதிமுக உட்கட்சிப்பிரச்சினை
அதன் பின்னர் ஓபிஎஸ் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். சசிகலா, டிடிவி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது. இந்நிலையில் கட்சிக்குள் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே அதிகார போட்டி எழுந்தது. மறுபுறம் சசிகலா கட்சிக்கு திரும்புவது குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அதிகரித்த முரண்பாடு
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பின் குழப்பமான நிலை ஏற்பட்டது. தலைமைக்குள் மோதலும், ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கையும், சசிகலாவின் பொதுச் செயலாளர் வழக்கும் பிரச்சினையாக எழுந்தது. கட்சியில் அதிமாரம் செலுத்துவதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே போட்டி எழுந்தது. மா.செக்கள் கூட்டத்தில் மோதல் எழுந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டம் கூடியது.

கட்சி விதிகளில் மாற்றம் வானளாவிய அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்
நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.

விதிகளில் மாற்றம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் அதிகரிப்பு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து பொதுக்குழு எந்த முடிவும் எடுக்க முடியாது, கட்சி விதிகளில் அனைத்து திருத்தங்களை செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு அதே நேரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எதுவும் எடுக்க அதிகாரமில்லை என்று திருத்தப்பட்டது.

உட்கட்சி தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. டிச.7 அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடப்பதாகவும், 3,4 தேதிகளில் வேட்பு மனு தாக்கல் 5 வேட்பு மனு பரிசீலனை என அறிவிக்கப்பட்டது. அவரச அவசரமாக உட்கட்சி தேர்தலை அறிவித்தது, செயற்குழு முடிவை பொதுக்குழுவில் வைக்காதது, போதிய கால அவகாசம் இல்லாமல் தேர்தல் நடத்துவது சரியல்ல என்கிற வாதம் எழுந்தது.

கே.சி.பழனிசாமி வழக்கு
தேர்தல் அறிவிப்பு முறையாக இல்லை, வாக்காளர் பட்டியல் இல்லை, போதிய அவகாசம் தரப்படாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் எம்.பி திடர்ந்த வழக்கில் தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம் ஓபிஎஸ்-இபிஎஸ் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு அடி உதை
இந்நிலையில் வேட்புமனுவை வாங்க வந்த ஓட்டேரி ஓம்பிரசாத் சிங் தாக்கப்பட்டார். மறுநாள் சில பேர் தாக்கப்பட்டனர். இதனால் தங்களுக்கு எதிராக நிற்பவர்களை அச்சுறுத்தி யாரையும் எதிர்த்து போட்டியிடாமல் செய்ய வைக்க முயல்கிறார்கள் என்று எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். ஆனாலும் ஓபிஎஸ்-இபிஎஸ் திட்டமிட்டப்படி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் வேட்புமனுக்கல் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் ஆதரவாக கட்சியில் 20 க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இருவர் வேட்புமனுவையும் பரிசீலிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது நாளைக்கு விசாரணைக்கு வர உள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியின்றி தேர்வு
இந்நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தனர். இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிடாததாலும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தபோது அது கட்சி விதி 20(2)-ன் படி சரியாக இருந்ததாலும் இருவரையும் போட்டியின்றி தேர்வு செய்வதாக பொன்னையன் அறிவித்தார்.

பதவி ஏற்பு எப்போது
இருவரும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதை ஒரு விழாவாக நடத்தி இருவரும் பொறுப்பேற்க உள்ளனர். அதற்கான தேதி உள்ளிட்டவைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications