முரசொலியை விடுகதை பாணியில் தாக்கியிருக்கிறார் ரஜினி.. பாராட்டத்தான் வேண்டும்.. அதிமுக
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியை விமர்சித்ததற்காக நடிகர் ரஜினிகாந்ததை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் பாராட்டி உள்ளார்.
அண்மையில் துக்ளக் வார இதழின் பொன்விழாவில் பேசிய ரஜினிகாந்த், முரசொலியை படிப்பவர்கள் திமுககாரர்கள் என்றும் துக்ளக் இதழை படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் கூறியிருந்தார். இவரது பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ரஜினியை விமர்சித்து பலரும் கருத்துக்களை பகிர்ந்தனர். உதயநிதி ஸ்டாலின் நேரடியாகவே ரஜினியை விமர்சித்தார்.

இந்நிலையில் முரசொலி குறித்து விமர்சனத்திற்காக ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் பாராட்டி உள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், "தொண்டர்களிடம் வசூலித்த தொகையால் முரசொலி அறக்கட்டளை தொடங்குவதாக சொல்லிவிட்டு அதனை தங்களது குடும்பத்து தனிச்சொத்தாக்கிக் கொண்டவர்கள்,
தொண்டர்களிடம் வசூலித்த தொகையால் முரசொலி அறக்கட்டளை தொடங்குவதாக சொல்லிவிட்டு அதனை தங்களது குடும்பத்து தனிச்சொத்தாக்கிக் கொண்டவர்கள்,
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) January 19, 2020
அதற்கு ஆசிரியர் கூட அவர்கள் குடும்பத்தின் ஒருவராகத்தான் இருக்க முடியும். மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கான காகித காவடியே முரசொலி. (1)
அதற்கு ஆசிரியர் கூட அவர்கள் குடும்பத்தின் ஒருவராகத்தான் இருக்க முடியும். மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கான காகித காவடியே முரசொலி.
இன்றைய செய்தி நாளைய வரலாறு என தலைப்பிட்டுக்கொண்டு, இன்றைய பொய்யை நாளைக்கு உண்மையாக்க தி.மு.க.வால் நடத்தப்படுகிற மூலப்பத்திர முரசொலியை படிப்பவர்கள் மூளைக்கெட்டவர்கள் என்பதனை விடுகதை பாணியில் போட்டுத் தாக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் அதனை பாராட்டத்தான் வேண்டும்..!
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) January 19, 2020
இன்றைய செய்தி நாளைய வரலாறு என தலைப்பிட்டுக்கொண்டு, இன்றைய பொய்யை நாளைக்கு உண்மையாக்க தி.மு.க.வால் நடத்தப்படுகிற மூலப்பத்திர முரசொலியை படிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை விடுகதை பாணியில் போட்டுத் தாக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் அதனை பாராட்டத்தான் வேண்டும்.." இவ்வாறு நமது அம்மா நாளேடின் ஆசிரியர் மருது.அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications