மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு மணிமண்டபம்! அதிமுக வைத்த கோரிக்கை! அமைச்சர் தந்த 'நச்' பதில்!
சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு காலமான சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதிக்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் முன் வைத்தார் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா.
சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா தனிக் கேள்வி எழுப்பும் பட்சத்தில் அரசு அது குறித்து பரிசீலிக்கும் என ஒற்றை வரியில் பதிலளித்தார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
இதேபோல் காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு மணிமண்டபம் அமைப்பது பற்றியும் பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

சிங்கம்பட்டி ஜமீன்
சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியை பொறுத்தவரை தமிழில் ஆழ்ந்த புலமையும், அறிவும் மிக்கவர். அதேபோல் ஆங்கிலத்திலும் மிக சரளமாக பேசும் ஆற்றலை பெற்றவர். ராமநாதபுரம் சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி மகன் தான் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி என்பது கூடுதல் தகவல். சிங்கம்பட்டி ஜமீனை பொறுத்தவரை கலை ஆர்வம் கொண்டவர். ஜமீன்தாரக இருந்தபோதிலும் கூட எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி எளிமையை பேணி நடந்தவர்.

இசக்கி சுப்பையா
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரன்மனையில் வசித்து வந்த கடைசி ஜமீன் தாரரான முருகதாஸ் தீர்த்தபதி புற்றுநோய் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் காலமானார். இவர் காலமாகிய பிறகு 2020 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி தான் நடைபெற்றது. அப்போதெல்லாம் அவருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து கோரிக்கை வைக்காத அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா இப்போது அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் சாமிநாதன்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா, சிங்கம்பட்டி ஜமீனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து தரப்படும் என வினவினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இது தொடர்பாக உறுப்பினர் இசக்கி சுப்பையா தனிக் கேள்வி எழுப்பும் பட்சத்தில் அரசு பரிசீலிக்கும் எனக் கூறினார்.

சபாநாயகர் அப்பாவு
முன்னதாக சட்டசபையில் பேசுவதற்காக பேப்பரில் எழுதி தயாரித்து எடுத்து வந்திருந்த வரலாற்று தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தார் இசக்கி சுப்பையா. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''தம்பி இசக்கி சுப்பையா நீங்க வரலாற்றில், தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என எனக்குத் தெரியும், விஷயத்துக்கு வாங்க'' எனக் கூறி நோஸ்கட் செய்தார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications