Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 20 பேர் கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதியில்தான் போட்டியிடுகிறார்கள். ஆனால், 3 பேர் மட்டும் தொகுதி மாறி போட்டியிடுகிறார்கள்.

என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுக, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் ரெடியாகி வருகிறது. இன்னும் என்டிஏ கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிக்கப்படவில்லை. இருப்பினும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

AIADMK Releases 1st Candidate List

வேட்பாளர்கள் மாற்றம்

இந்த 23 வேட்பாளர்களில், ராஜேந்திரபாலாஜி, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மட்டும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியை தவிர்த்து, இந்த முறை வேறு தொகுதிகளில் களமிறங்கியிருக்கின்றனர்.

  • கடந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜேந்திரபாலாஜி, இந்த முறை சிவகாசியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
  • கடந்த முறை விழுப்புரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த சி.வி.சண்முகம், இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
  • கடந்த முறை போளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்த முறை கலசபாக்கத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

மாற்றம் எதற்காக?

முதலில் மயிலம், விழுப்புரம் தொகுதிகளை பார்ப்போம். மயிலம் தொகுதியில் வன்னியர் மற்றும் தலித் மக்களின் வாக்கு வங்கிதான் வெற்றியை தீர்மானிக்கும். கடந்த 2021 தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட சிவகுமார் வெற்றி பெற்றிருக்கிறார். அப்படியெனில், வன்னியர் வாக்குகளும், அதிமுக ஆதரவும் இருந்தால் வெற்றி நிச்சயம். இதை கணக்கில் கொண்டுதான் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பார்.

விழுப்புரம் தவிர்க்கப்பட்டது ஏன்?

அதேபோல விழுப்புரத்தில் அவர் போட்டியிடாமல் தவிர்த்ததற்கு காரணம், மருத்துவர் ராமதாஸ்+சசிகலா கூட்டணிதான். விழுப்புரத்திலிலும் வன்னியர் மற்றும் தலித் மக்களின் வாக்கு வங்கிதான் வெற்றியை தீர்மானிக்கும். ஆனால், அதைவிட முக்கியமான விஷயம், இங்கு திமுகவுக்கான ஆதரவு பரவலாக இருக்கிறது என்பதுதான். ஒருவேளை மருத்துவர் ராமதாஸ் மற்றும் சசிகலா அணி, அதிமுகவுக்கு எதிராக இங்கு வேலை பார்த்தால்.. அது நிச்சயம் திமுகவுக்குதான் சாதகமாக அமையும். எனவேதான் சி.வி.சண்முகம் உஷாராகியிருக்கிறார்.

ராஜேந்திரபாலஜி தாவல் ஏன்?

கடந்த 2021ல், ராஜபாளையத்தில் போட்டியிட்டிருந்த ராஜேந்திரபாலாஜி தோல்வியடைந்திருந்தார். இதற்கு முக்கியமான காரணம் சாதிய வாக்குகள்தான். ராஜபாளையத்தை பொறுத்தவரை, வெற்றியை தீர்மானிப்பவர்களாக ராஜு, முக்குலத்தோர் மற்றும் தலித் சமூகத்தினர் இருக்கின்றனர். மிக குறிப்பாக ராஜு சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்கிறதோ அவர்களே வெற்றியாளர். ராஜேந்திரபாலாஜி இந்த சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது. மட்டுமல்லாது, இவர் சிவகாசிக்காரர். சிவகாசியில் 2011, 2016ல் வெற்றி பெற்றிருக்கிறார்.

தோல்விக்கு காரணம்

இப்படி இருக்கையில் ராஜு சமூகத்தினர் மத்தியில் இவர் வெளியூர்காரராகவே தெரிந்தார். இருப்பினும் முக்குலத்தோர் வாக்குகளை செந்தில் பாலாஜி நம்பியிருந்தார். இது அவருக்கு கை கொடுத்தாலும், ராஜு சமூகத்தினர் பெரிய அளவில் வாக்களிக்காதது, தலித் வாக்குகள் திமுக பக்கம் திரும்பியது போன்ற காரணங்களால் அவர் தோல்வியுற்றார்.

எனவே இந்தமுறை பலப்பரிட்சையை விரும்பாத ராஜேந்திர பாலாஜி, தனது சொந்த மண்ணில் களமிறங்கியிருக்கிறார். இது வெற்றியை எளிதாக்கும் என்று நம்புகிறார்.

கலசபாக்கத்தின் கதை

அதோபோல, கடந்த முறை போளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்த முறை கலசபாக்கத்தில் போட்டியிட காரணமும், கலசபாக்கம் என்பது அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சொந்த மண் என்பதால்தான். இங்கு ஈஸியாக ஜெயித்துவிட முடியும் என்பதால் போட்டியிடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+