தங்கமாய் தாங்குனாரே.. என்னாச்சு தங்கமணிக்கு! ’மகனுக்காக’ ஓரம் கட்டும் எடப்பாடி! கொதிப்பில் அதிமுக!
சென்னை: பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் சமாதானம் ஆகி இருக்கிறார்கள். அதில் செங்கோட்டையனும் ஒருவர். ஆனால் விதை நான் போட்டது என்பது போல பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர்கள் முதன்மையானதாக கருதப்படும் தங்கமணி கடந்து செல்ல நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி நிகழ்வுகளை புறக்கணித்து வருகிறார். கட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் மகனின் ஆதிக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர் தானே விலகி இருப்பதாக கூறுகின்றனர்.
எதிர்பார்த்தது போலவே அதிமுக பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என ஒருபுறம் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களான ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்க, பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தாலும் பாஜக மீது பாசம் காட்டிய சில முன்னாள் அமைச்சர்கள் கூட்டணி வேண்டும் என பிடிவாதம் பிடித்து வந்தனர்.

அவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி - வேலுமணி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், எடப்பாடி என்றாலே பின்னணியில் தங்கமணியும் வேலுமணியும் நிச்சயம் நிற்பார்கள். அந்த அளவுக்கு ஒன்றாக இருந்த இவர்கள் தற்போது விலகி இருக்கின்றனர். குறிப்பாக தங்கமணி எந்த நிகழ்ச்சிகளிலும் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை.
பாஜக அதிமுக கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சியில் கூட தங்கமணி இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்பிய நிலையில், கூட்டணி வேண்டும் அப்போது தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தி அவர்கள் ஒருவர் தங்கம். ஆனால் கூட்டணி அறிவிப்பின்போது அவர் இல்லை. என்ன காரணம் என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது..
"மற்ற அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளர்கள் என்றால். தங்கமணி ஒரு படி மேலே அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர். சம்பந்தி முறை வேண்டும். ஆட்சியின் போதும் ஆட்சிக்குப் பிறகும் எடப்பாடி பழனிச்சாமியின் இரு கண்களில் ஒருவர் வேலுமணி என்றால் மற்றொரு கண்ணாக இருந்தவர் தங்கமணி. ஆனால் பாஜக கூட்டணி, சசிகலா விவகாரம் ஆகியவற்றின் தனது பேச்சை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை என்பதால் அவராகவே சில தருணங்களில் விலகி இருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை வைத்து பாஜக தான் நினைத்த கூட்டணியை சாதித்து விட்டது. ஆனாலும் செங்கோட்டையனுக்கு பின்னணியில் இருந்ததும் தங்கமணி தான் எனவும் சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை வைத்து உறவினர்களை உடைத்து விடலாம் என அவரது எதிராளிகள் திட்டம் போட்டார்கள். எனவே தன்னை சுற்றி இருப்பவர்கள் வலியுறுத்தியதால் எடப்பாடி பாஜகவை ஏற்றுக் கொண்டார். ஆனால் தான் சொன்னபோது கேட்காமல், பிறர் சொல்லும்போது கேட்டு விட்டார் என்ற ஆதங்கம் தங்கமணிக்கு இருக்கிறது. அதனால் தான் பாஜக கூட்டணி அறிவிப்பு கூட்டத்தில் வேலுமணி கலந்து கொண்டும் தங்கமணி அங்கே இல்லை" என்றார்கள்.
மற்றொரு தரப்பு," இதுவரை அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருந்த தங்கமணியை விட தற்போது எடப்பாடி மகன் மிதுனை முன்னிலைப்படுத்துகிறார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் மிகவும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சர்வே நடத்தி வருகிறார். அதில் முக்கிய வேலை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்வது தான்.
ஆட்சிக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் தன்னை கூட வைத்துக் கொண்டு தற்போது ஒதுக்கி விட்டதாக தங்கமணிக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் ஜெயலலிதா பிறந்தநாள் பேரணியில் கூட தங்கமணி கலந்து கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் ஜெயலலிதாவின் நிகழ்ச்சி என்றால் தங்கமணி தான் முதல் ஆளாக இருப்பார். தற்போது அதிக அதிருப்தி காரணமாகவே அவர் கலந்து கொள்ளவில்லை" என போட்டு தாக்குகிறார்கள்.
இதற்கிடையே நாமக்கல்லை சேர்ந்த சில நிர்வாகிகளிடம் பேசிய போது," எடப்பாடி பழனிச்சாமியின் தங்கமணியும் ஒன்றாகவே இருக்கிறார்கள். சென்னைக்கு அடிக்கடி ஒன்றாகவே பயணிக்கிறார்கள். எடப்பாடி வீட்டுக்கு அடிக்கடி தங்கமணி செல்கிறார். சொல்லப் போனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக நம்பியது தங்கமணியை மட்டும் தான். பாஜக கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு தன்னைவிட மூத்தவர்கள் போகட்டும் என தங்கமணி தான் ஒதுங்கிக் கொண்டார். நாமக்கலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கே இருக்கிறார். எடப்பாடி குறித்து பெருமையாக தான் பேசுகிறார். தங்கமணிக்கு ஆகாதவர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் இவரை பற்றி தவறாக சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் " என முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.
-
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி -
அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் இல்லையாம்.. அந்த தொகுதியில் பாமக கோரிக்கை.. வாக்கு கொடுத்த எடப்பாடி! -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது











Click it and Unblock the Notifications