அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 20-ல் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மான வழக்குகளில் தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலை உள்ளது. ஆகையால் அதிமுகவின் பொதுச்செயலாலராகப் பொறுப்பேற்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20-ந் தேதி (நாளை மறுநாள்), அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார் அக்கட்சி பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகிவிட்டாலும் சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் உள்ள வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதை எதிர்க்கும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 20-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனு மீது 10 நாட்களில் முடிவை அறிவிக்க இருக்கிறது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஏப்ரல் 20-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications