எடப்பாடி கையில் சாவி.. பூட்டை ஆட்டும் சகாக்கள்! ராஜ்யசபா ரேஸில் அதிமுக தலைகள்! முதலிடத்தில் இவரா?
சென்னை: தமிழகத்திலிருந்து காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கம்போல் முதல் கட்சியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது திமுக. இந்த நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த முறை போல கூட்டணி கட்சியினருக்கு கொடுத்து ஏமாறுவதை விட சொந்த கட்சியினருக்கு வாய்ப்பு கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார். இதில் முன்னணியில் இருக்கிறார் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் என்கின்றனர் அதிமுகவினர்.
தமிழகத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் கிடைக்கும். சுழற்சி முறையில் இரண்டு முறை இதற்கான தேர்தல் நடத்தப்படும் .தற்போது திமுகவின் எம்எல்ஏ பலத்தை பொருத்து நான்கு எம்பிக்கள் திமுகவுக்கு கிடைக்கும். அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர் பதவிகள் கிடைக்கும்.
வைகோ, வில்சன், சண்முகம், அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்டோரின் பதவி நிறைவடைந்து இருக்கும் நிலையில், வில்சன் மீண்டும் திமுக தரப்பில் போட்டியிருக்கிறார். கவிஞர் சல்மா, சண்முகமும் களமிறங்கின்றனர். 4 சீட்டுக்கு புதுமுகமாக கமல்ஹாசனும் தேர்தலில் களம் இறங்குகிறார்.

இது ஒரு புறம் இருக்க அதிமுக என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுகவுக்கு இரண்டு எம்பிக்கள் கிடைப்பது உறுதியாக இருக்கிறது. கடந்த முறை தர்மருக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் வாய்ப்பு தரப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூட்டணியை பலப்படுத்த வேண்டுமானால் பாமக, தேமுதிகவுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பது மறைமுக கோரிக்கையாக இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்படும் என தேமுதிக விட அதிமுக கூறியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பு அதனை மறுத்தது.
இந்த நிலையில் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை வாய்ப்பு அதிமுகவால் தரப்பட்டது. ஆனால் தேர்தல் என்று வரும்போது அவர்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. தற்போதைக்கு மக்களவையில் ஒரு உறுப்பினர் கூட அதிமுகவுக்கு இல்லை. அதே நேரத்தில் மாநிலங்களவையில் சந்திரசேகரன், தர்மர், சி.வி சண்முகம், தம்பிதுரை ஆகியோர் இருக்கின்றனர். இதனால் தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநிலங்களவையில் ஆறு உறுப்பினர்களை கொண்ட கட்சியாக அதிமுகவை மாற்றிவிடலாம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் திட்டமாக இருக்கிறது.
மேலும் ஒரு வேலை பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு வாய்ப்பு கேட்டால், அதனை பயன்படுத்தி சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கான இடங்களை குறைத்து கொடுத்துவிடலாம் என்ற ஒரு வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமி வசம் இருக்கிறது. ஆனால் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கும் அவர், அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போதைய அவர்களுடன் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டாம் என எதிர்பார்க்கிறார்.
பாஜக தரப்பில் மாநிலங்களவை வாய்ப்பு கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் இடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய எம்பி ஆன சந்திரசேகரன் மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறார். இதற்காக தலைமையிடம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த தேர்தலில் தோற்ற முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் மாநிலங்களவை சீட்டை எப்படியாவது பெற்று இட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாஃபா பாண்டியராஜன், கோகுல இந்திரா, ஜெயக்குமார், செம்மலை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்று விட வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி இடம் நேரடியாக பேசியதோடு, சில நிர்வாகிகளை தூது போக வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைக்கு இந்த ரேசில் முன்னணியில் இருப்பவர் ஜெயக்குமார். ஜெயலலிதா இருந்த போதும், சரி எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் சரி, தலைமைக்கு எதிராக வருபவர்களை விமர்சிக்க ஒருபோதும் தயங்கியதில்லை.
குறிப்பாக பிற தலைவர்கள் பாஜகவை விமர்சிக்க தயங்கிய போது எடுத்த எடுப்பிலேயே அண்ணாமலையை அட்டாக் செய்தவர் ஜெயக்குமார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போதெல்லாம் ஜெயக்குமார் உடன் நின்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாஜக கூட்டணி தொடர்பாக சில முன்னாள் அமைச்சர்கள் பொதுவெளியிலேயே பேட்டி கொடுத்த நிலையில், பாஜக கூட்டணியே வேண்டாம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே அனைத்து தேர்தல்களையும் சந்திக்கலாம், பாஜக வந்தால் நஷ்டம் தான், நானே படுதோல்வியை சந்திக்க பாஜக தான் காரணம் என வெளிப்படையாக பேசியவர் ஜெயக்குமார்.
அது மட்டுமல்லாமல் சட்டமன்ற சபாநாயகராக அனுபவம், டெல்லி உடன் நெருக்கம் என தனக்கு இருக்கும் எல்லா தகுதிகளையும் முன்வைத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி வருகிறார். தற்போதைய சூழலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தாலும் ஒரு தொகுதியை நிச்சயம் அதிமுகவினருக்கு தான் வழங்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதியாக இருக்கும் நிலையில் அதில் முன்னணியில் இருக்கிறார் ஜெயக்குமார் என்கின்றனர் அதிமுகவினர். இன்னும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும்.
-
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக!












Click it and Unblock the Notifications