50 ஆண்டுகால அதிமுகவின் 7-வது பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி!
சென்னை: அதிமுக உருவாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அக்கட்சியின் 7-வது பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
1972-ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சியானது எம்ஜிஆர் காலம், ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு பிந்தைய காலம் என பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் தலைவராக இருந்தார்; அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இருந்தது. ஆனால் தலைவரின் ஆணைப்படியான கையெழுத்துப் போடும் பதவியாக இருந்தது.
எம்ஜிஆர் காலத்தில் அதிமுக பொதுச்செயலாளர்களாக நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் ஆகியோர் பதவி வகித்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்டு மீண்டும் இணைந்தது. அப்போது முதல் மறையும் வரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா தான் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவரும் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்கிற விதி உருவாக்கப்பட்டது; மேலும் பொதுச்செயலாளருக்குப் பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
தற்போது நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிமுகவில் முதல் முறையாக துணை பொதுச்செயலாளர் பதவியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவின் 7-வது பொதுச்செயலாளராக - இடைக்கால பொதுச்செயலாளராக தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 4 மாதங்களில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications