அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து.. மாஜி சட்ட அமைச்சர் சிவி சண்முகம் முன்வைத்த சட்ட பாயிண்டுகள்தான் என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுக்குழு வரலாறு காணாத அமளி துமளி களேபரங்களுடன் கூடிய வேகத்தில் முடிவடைந்தது. ஆனாலும் பொதுக்குழுவை முன்வைத்து அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் இன்னும் தர்க்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

சென்னையில் நேற்று அதிமுக ஓபிஎஸ் கோஷ்டியின் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் கூறியிருந்ததாவது:
- அதிமுக அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும்
- அதிமுக பொதுக்குழுவை கூட்ட அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை
- அதிமுக அவைத் தலைவரை தேர்வு செய்யும் தீர்மானத்தையும் பொதுக்குழு நிராகரித்ததால் அவைத் தலைவர் தேர்வு செல்லாது
- அதிமுக பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான ஒப்புதல் உட்பட அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் பொதுக்குழுவே செல்லாது
- அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், ஒருங்கிணைப்பாளருக்குதான் உண்டு.
சென்னையில் நேற்று வைத்திலிங்கம் கூறியதற்கு எடப்பாடி கோஷ்டியின் சி.வி. சண்முகம் இன்று பதிலளித்தார். சி.வி.சண்முகம் முன்வைத்த கருத்துகள்:
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நேற்று காலாவதி ஆகிவிட்டன
- பொதுக்குழுவில் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதி.
- தற்போது அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பழனிசாமி உள்ளனர்.
- அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 5-1 பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவை கூட்டத்தான் வேண்டும்
- அதிமுக பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளதாக பதிவுதான் செய்யப்பட வேண்டும்; ஒப்புதல் தேவை இல்லை
- அதிமுக அவைத் தலைவரை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக் கொண்டு பேசியதால் தமிழ் மகன் உசேன் தேர்வு செல்லும்.
- ஓபிஎஸ் கையெழுத்துப் போட்டிய கூட்டம்தான் நேற்று நடைபெற்றது; சட்டப்படி நீதிமன்றம் உத்தரவுப்படி நடந்த பொதுக்குழு கூட்டம்; ஆகையால் பொதுக்குழு செல்லாது என்கிற பேச்சுக்கே இடம் இல்லை
- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாத நிலையில் கட்சி விதிப்படி அதிமுக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்டுகிறார்
- தேர்தல் ஆணையத்தில் கட்சி நிர்வாகிகள் தேர்வு பற்றி தகவல் மட்டும் தெரிவித்தால் போதும்; தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் எதுவும் தேவை இல்லை.
- 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கேட்டுக் கொண்டதால் புதிய பொதுக்குழு கூடுகிறது
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெறும் 40 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் ஆதரவு.
- அதிமுகவுக்குள் பஞ்சாயத்து செய்யும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை
- அதிமுக கட்சி பிரச்சனையில் தலையிட தேர்தல் ஆணையத்தால்தான் முடியும்
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications