Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களுக்குதான் தலைவலி..விலகி செல்லும் ’இரட்டை இலை’! கட்டம் கட்டும் ’தாமரை’! கொங்கு சீனியர்ஸ் அப்செட்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் தருவதை விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி பாஜக தரப்பிலிருந்து விலகிச் சென்று வருகிறார். இதனால் தங்களுக்குத்தான் சிக்கல் வரும் என்பதால் கொங்கு மண்டலம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள சீனியர்கள் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேருக்குநேர் மோதல் போக்கை கையாண்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழிந்து விட்டது. எடப்பாடிக்கே எப்போதும் போல நிர்வாகிகள் ஆதரவு, எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.

அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வத்தை அவ்வளவு குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. நிர்வாகிகள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் இருக்கிற ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்களோடு பாஜக தலைமையின் ஆதரவு தனக்கு இருப்பதாக தொடர்ந்து தகவல்களை பரப்பி வருகிறார்.

எடப்பாடி அதிருப்தி

எடப்பாடி அதிருப்தி

அதற்கு ஏற்றார் போல எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகம் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை தொடர்ந்து அரவணைத்து வருகிறது. குடியரசு தலைவர், தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை, அமித் ஷாவின் சந்திப்பு என எடப்பாடி பழனிச்சாமிக்கு தரும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஓ பன்னீர்செல்வத்தையும் பாஜக தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது.

பாஜகவுக்கு ரெட் கார்ட்

பாஜகவுக்கு ரெட் கார்ட்

இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாகவும் தனது தரப்பு ஆதரவாளர்களை இது தொடர்பாக பொது வழிகளில் பேச வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து மோதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக தலைமையிடம் இருந்து எடப்பாடி விலகிவிடுவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். தொண்டர்கள் பலம் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பாஜ முக்கியத்துவம் கொடுப்பதால், கோபத்தில் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

சீனியர்கள் அதிருப்தி

சீனியர்கள் அதிருப்தி

அதே நேரத்தில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இதேபோல தேர்தல் ஆணையமும் எந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். இதனால் இரு முடிவுகளும் வந்த பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம் என அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போதுதான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மூத்த முன்னாள் அமைச்சர்களும், கடந்த ஆட்சிக் காலத்தில் முக்கியத்துறைகளை கவனித்து வந்த சில முன்னால் அமைச்சர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 வரிசை கட்டும் வழக்குகள்

வரிசை கட்டும் வழக்குகள்

ஏற்கனவே எடப்பாடி தரப்பு மீது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை, மருத்துவக் கல்லூரி முறைகேடு, ஜெயலலிதா மரணம், டெண்டர் முறைகேடு, அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அமலாக்கத்துறை நோட்டீஸ் என அடுத்தடுத்து பல வழக்குகள் வரிசைகட்டி வருகின்றன, பாஜக தலைமையை பகைத்துக் கொண்டால் உங்களை விட எங்களுக்கே அதிக சிக்கல் வரும் என மறைமுகமாக தங்கள் அச்சத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

சேலத்தில் முகாம்

சேலத்தில் முகாம்

அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என மிக உறுதியாக இருக்கிறார். இதனால் தங்கள் தரப்புக்கு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்துள்ள கொங்கு மண்டல சீனியர்கள் லேசான அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்கின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள். தற்போது சேலம் மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து அங்கு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த இருக்கிறார்.

புலம்பல்

புலம்பல்

இதனால் கோவையைச் சேர்ந்த சீனியர் ஒருவர் ஏற்பாடு செய்து வந்த பொதுக்கூட்டப் பணிகள் தாமதம் அடைந்திருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்றாலும் தான் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் தான் அவர் முதலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறாராம். ஏற்கனவே ஓபிஎஸ் எடப்பாடி இணைய வேண்டும் என பாஜக தலைமை வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லி மேலிடப் பேச்சை எடப்பாடி கேட்காத நிலையில், தற்போது சிறு சிறு ஆலோசனைகள் வழங்கும் தங்கள் பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறாரே என அவர்கள் புலம்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+