அதிமுக செயற்குழு கூட்டம்.. தலைகளை அழைத்த எடப்பாடி.. இன்று மாலையே நடக்க போகும்.. சம்பவம்!
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை 04:30 மணிக்கு நடைபெறகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். சமீபத்தில் கூட சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். அதிலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணிதான்.. ஆட்சியில் கூட்டணி இல்லை என்பதையும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறிவிட்டார்.
அதாவது தேர்தலை ஒன்றாக சந்திப்போம். ஆனால் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் என்று இப்போதே சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். பொதுவாக அரசியலில் இன்ப்ளூயன்ஸ் செய்ய சிலர் இருப்பார்கள். அரசியல் வியூகம் வகுப்பவர்கள், சில பிரிவினரை ஒரு தலைவருக்கு கீழ் கொண்டு வருபவர்கள், ஒரு அரசியல் தலைவருக்கு ஆதரவாக களத்தை மாற்றுபவர்கள் என்று அரசியல் களத்தில் இன்ப்ளூயன்ஸ் செய்ய பலர் இருக்கிறார்கள். இவர்களை எடப்பாடி அடிக்கடி சந்தித்து வருகிறாராம்.
கூட்டணி உறுதி
இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக செயற்குழு கூட்டம் மாலை 04:30 மணிக்கு நடைபெறகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டணி வைக்கப்பட்டது ஏன். முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்றெல்லாம் எடப்பாடி ஆலோசனை செய்ய உள்ளார். இந்த செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை. ஏற்கனவே மாஜி அமைச்சர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக எடப்பாடி விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம் அளிக்க உள்ளார்.
சர்வே
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சி ரீதியாக சர்வே எடுக்க உள்ளாராம். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இந்த சர்வேவை எடுக்க உள்ளாராம். அதன்படி அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் எவ்வளவு வெற்றி வாய்ப்பு இருந்தது. பாஜக கூட்டணியோடு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாஜக மூலம் எத்தனை வாக்குகள் அதிமுகவை நோக்கி வருகின்றன வெளியே செல்கின்றன. முதலமைச்சர் முகங்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. விஜயால் அதிமுகவிற்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? திமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளதா சரிந்து உள்ளதா?ஆட்சிக்கு ஆதரவான எதிரான மனநிலைகள் உள்ளதா? அதிமுக எந்தெந்த மண்டலங்களில் வலுவாக உள்ளது. எந்தெந்த மண்டலங்களில் வலிமை இன்றி உள்ளது என்று பல விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சர்வே மூலம் அறிய உள்ளாராம். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் எடப்பாடி ஒப்பந்தம் செய்ய உள்ளாராம்.
அதற்கு முன்பாக தேர்தல் விவகாரங்கள் பற்றி ஆலோசனை செய்ய, உட்கட்சி மோதல்களை களைய, கிரவுண்டு நிலவரங்களை சரி செய்யும் வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி செயற்குழு கூட்டத்தில் பேச உள்ளாராம்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications