"பச்சை பாம்பு" செத்து போயிட்டால்?.. எம்ஜிஆரை விடுங்க.. தத்துவபோர் திமுகவும், அந்த கோமாளியும்: ஆ.ராசா
திமுகவின் தத்துவார்த்த போர் குறித்து எம்பி ஆ ராசா நமக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: திமுகவின் தத்துவ போர் என்பது நிலையானது.. இந்த தத்துவ போருக்கு குறுக்கே வருபவர்கள், சில சமயம் கோமாளியாக இருந்துவிடுகிறார்கள்.. அப்படித்தான் இப்பவும் ஒரு கோமாளி வந்திருக்கிறார்" என்று திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.
திமுகவின் எம்பியும், மூத்த தலைவருமான ஆ.ராசா, மிகப்பெரிய ஆளுமையாக, தவிர்க்க முடியாத தலைவராக அரசியல் களத்தில் உருவாகி உள்ளார்..
சமீபகாலமாகவே இந்துத்துவா, மனுதர்மம், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை ஆழ விதைத்து வருகிறார் ஆ.ராசா.. அந்தவகையில், நம் ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு சிறப்பு ஒன்றை தந்துள்ளார்.
அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. திராவிட சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட அதிமுக, திமுக மட்டுமே தமிழகத்தில் போட்டி போட்டு வருகிறார்கள்.. தேர்தல் அடிப்படையில் இல்லாமல், சித்தாந்த ரீதியாக, திமுக vs பாஜக என்பது செல்லுபடியாகுமா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.. அதற்கு ஆ. ராசா நமக்கு தந்த பதில் இதுதான்:

பச்சை பாம்பு
"இப்படி ஒப்பிடுவது குறித்து ஒரு விளக்கத்தை தர நினைக்கிறேன்... ஒருமுறை கலைஞரிடம் திமுகவும், அதிமுகவும் எப்படி இருக்கின்றன? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்,. அதற்கு கலைஞர், "பச்சை பசேல் என்று இருக்கக்கூடிய கொடியில், ஒரு பச்சை பாம்பு படுத்திருக்கிறது.. ஆனால், பாம்பு எது? கொடி எது? என்பது தமிழர்களுக்கு தெரியவில்லை.. கை வைத்து பார்த்தால்தான், அது தெரியும் என்றார்.. பச்சை கொடி எது, பச்சை பாம்பு எது என்பது தெரியாதநிலையில் தான், திமுக, அதிமுகவுக்கான அடையாளத்தை பிரிக்க முடியாமல், இரு தருப்புக்குமே அரசியல் நடந்து கொண்டிருக்கிறது..

பச்சைப் பாம்பு
இப்போது எங்களுக்கு உள்ள கவலை என்னவென்றால், அந்த பச்சை பாம்பு இப்போது இருந்தாலே, நல்லது போல என்றே நினைக்கிறோம்.. ஒருவேளை அந்த பச்சை பாம்பு செத்துப் போயிட்டால், எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த சித்தாந்தம் கிடைத்துவிடும்.. சொந்த கட்சியிலேயே சித்தாந்த ரீதியாக நடத்தியவர் நேரு.. இந்து சட்ட மசோதாவை நேருவால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை? மதன்மோகன் மாளவியோ போன்ற பிராமணர்கள் நேருவை தடுத்துவிட்டார்கள்.. அந்த சட்டம் கொண்டுவந்தால், "எங்களுடைய பிராமண பெண்களை ஒழுக்கம் கெட்டவர்களாக ஆக்கிவிடும்" என்றனர்..

பிராண்டு
இந்த சக்திதான் நேருவையே அன்று தடுத்தது.. ஆக, காங்கிரசுக்குள்ளேயே பிராமணர்கள், பிராமணல்லாதவர்கள் என போராட்டம் அப்போது இருந்தது.. நல்வாய்ப்பாக, சொந்த கோபத்தில் காரணமாக, எம்ஜிஆர் இதே பிராண்டில் ஒரு கடையை ஆரம்பித்தார்.. அந்த பிராண்டு இருந்ததால்தான், அது தேர்தல் அரசியலாக மாறியது.. ஆனால், அது நிலையானது இல்லை.. அப்போதுகூட பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கொண்டு வந்தார் எம்ஜிஆர்.. என்ன காரணம்? அது தத்துவப்போர்தானே? இதே எம்ஜிஆர், இந்த பிராண்டில் கட்சியை நடத்தி, அந்த கட்சியில் தத்துவப்போர் வரும்போது, அதை தடுத்து நிறுத்தியது திமுகவும், திகவும்தான்..

கோமாளி
ஆக, பிராண்டு எதுவாக இருந்தாலும், அது காங்கிரஸாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும், தொடர்ந்து தத்துவார்த்தப்போர்களை நடத்தியதுதான் திமுகவும், திகவும்.. முதல்வராக இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, திருமணங்களிலோ அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ, சனாதானத்தை பற்றி பேசாமல் கலைஞர் இருந்ததில்லை.. ஒவ்வொரு பொதுக்குழுவிலும் இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், வரலாறு மொத்தத்தையும் சொல்வார்.. பேராசிரியரும் சொல்வரார்.. அப்படியானால் எங்கள் தத்துவ போர் என்பது நிலையானது.. இந்த தத்துவ போருக்கு குறுக்கே வருபவர்கள், சில சமயம் கோமாளியாக இருந்துவிடுகிறார்கள்.. அப்படித்தான் இப்பவும் ஒரு கோமாளி வந்திருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications