எடப்பாடி பிறந்த நாளில் ஷாக் கொடுத்த சண்முகம்! இரண்டாக உடைந்த அதிமுக! இனி எஸ்பி வேலுமணி தான் எல்லாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிறந்தநாள் காணும் நிலையில் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம். திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்ட நிலையில் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் சட்டமன்ற குழு உறுப்பினராக எஸ்பி வேலுமணி இருப்பார் எனவும், தவெகவுக்கு ஆதரவு தருவதாகவும் கூறி அதிர வைத்து இருக்கிறார் சிவி சண்முகம்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரு வெற்றி பெற்று தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றியுள்ளது. 108 தொகுதிகளில் தனி பெரும்பான்மை பெற்ற அந்த கட்சி காங்கிரஸ் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

AIADMK CV Shanmugam SP Velumani

பல ஆண்டுகளாக ஆளுங்கட்ச்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருந்த திமுகவையும் அதிமுகவையும் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளியது. அதிர்ச்சி தரும் விதமாக தமிழகத்தை அதிக முறை ஆண்ட அதிமுகவை படுதோல்வி அடையச் செய்தது தமிழக வெற்றி கழகம் வெறும்.

அதிமுக உட்கட்சி மோதல்

47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் பல தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இந்த நிலையில் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டுமென எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு அணியாக திரண்டதாக தகவல் வெளியானது.

சிவி சண்முகம்

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிவி சண்முகம்," 2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி

மக்கள் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இதற்கு இடையே தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக தங்களுக்கு ஆதரவு தர இருப்பதாகவும் தான் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூறினார். இதனைக் கேட்டு பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தோம். எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த நாங்கள் திமுக ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர மாட்டோம் என உறுதியாக கூறினோம்.

எஸ்பி வேலுமணி

இந்த நிலையில் நாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர திட்டமிட்டுள்ளோம். இதற்கான தீர்மானம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணி, கொரடாவாக சி. விஜயபாஸ்கர் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான கடிதம் சட்டசபை தற்காலிக சபாநாயகர் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பிளவு

எம்ஜிஆர் ஜெயலலிதா தலைமையில் தொடர் வெற்றிகளை பெற்ற அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து ஆராய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இதில் நாங்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறோம்" என தெரிவித்தார். இதன் மூலம் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்று எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+