ராமநாதபுரத்தில் நரேந்திர மோடி போட்டி! பிரதமராகிறார் "தமிழர்".. அதிமுக முக்கிய புள்ளி பரபரப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவதால் அவர் தமிழரா என அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுக - பாஜக இடையே விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் எழுந்து வரும் நிலையில் கூட்டணி கட்சி என சொல்லிக் கொள்ளும் அதிமுகவினரிடையேவும் பாஜகவுக்கு மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிடுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதலே சொல்லப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா தென் சென்னை தொகுதிக்கு குறி வைத்துள்ளார்.
அத்துடன் அவர் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பாஜகவின் இலக்கு என தெரிவித்திருந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருங்காலத்தில் தமிழரை பிரதமராக்குவோம் என உறுதியெடுப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருமுறை வந்த போதும் அதை தமிழகம் இழந்துவிட்டது. அதற்கு காரணம் திமுகதான் என தெரிவித்துள்ளார்.
மேலும் திமுகவை சரமாரியாக பேசிய அமித்ஷா அதிமுகவுக்கு பல்வேறு விஷயங்களை சொல்லி அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார். தமிழகத்தை பொருத்தமட்டில் அதிமுக தலைமையில்தான் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அப்படியிருக்கும் போது அதிமுக சொல்லாமலேயே 25 தொகுதிகளில் வெற்றி என அமித்ஷா சொல்லிவிட்டு போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தென் சென்னை தொகுதியை குறி வைப்பதால் அதிமுக என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழர் ஒருவர் பிரதமராவார் என அமித்ஷா சொன்னதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தமிழ், தமிழர், தமிழ்நாடு என கூறியே அமித்ஷா ஏமாற்றி வருகிறார் என திமுக விமர்சித்தது.
மேலும் இல கணேசனை பிரதமராக்கலாமே என்றும் திமுக ஆலோசனை கூறியிருந்தது. முதல்வர் ஸ்டாலினோ தமிழிசை அல்லது எல் முருகனை பிரதமராக்கலாம் என தெரிவித்திருந்தார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் பிரதமராகும் வாய்ப்பை இழந்த பிரதமர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், காமராஜருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டு அதை இந்திரா காந்திக்கு கொடுத்தார். அது போல் திமுக கூட்டணியில் இருந்த மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது கூட்டணி கட்சிகள் பிரதமராகும் காலமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
ஆனால் தற்போது அமித்ஷா சொல்வது என்ன என புரியவில்லை. தமிழரை பிரதமராக்குவோம் என்றால் ராமநாதபுரம் எம்பி தொகுதியில் நரேந்திர மோடியை போட்டியிட வைத்து அவரை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வார்களா, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிதான் (மோடி) பிரதமர் என கூறிக் கொள்வார்களா என தெரியவில்லை என்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம்
@AmitShah
தமிழ் நாடு
பிரதமர்
நரேந்திர மோடி
இராமநாதபுரம்
இவ்வாறு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications