Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சண்டைக்கு எண்டு.. அப்பா மகனை சேர்க்க ஆர்வம் காட்டும் அதிமுக! தைலாபுரத்தில் சிவி சண்முகம் எண்ட்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்ட நிலையில் அன்புமணி தரப்பு தான் பாமக என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும் நான் தான் பாமக என்கிறார் ராமதாஸ். இதனிடையே தந்தை மகன் இடையேயான போரை முடித்து வைக்கும் வகையில் அதிமுக களமிறங்கி இருக்கிறது. அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ராமதாஸைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.

அதிமுகவைப் போலவே பாமகவிலும் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தந்தை மகன் இடையேயான பிளவு கட்சியை இரண்டாக உடைத்திருக்கிறது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் நான் தான் பாமக எனக் கூறிவரும் நிலையில் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என அன்புமணி கூறி வருகிறார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். உரிமையை மீட்க தலைமுறையைக் காக்க என 100 நாள் சுற்றுப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கி இருக்கும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் அந்தப் பயணம் நடைபெற்று வருகிறது.

Ramadoss anbumani ramadoss CV Shanmugam

பாமக மோதல்

இது ஒருபுறம் இருக்க, இரு தரப்பும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. அதில் அன்புமணி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவையும் அன்புமணி ராமதாஸுக்குத்தான் சொந்தம் எனக் கடிதத்தைக் காட்டி இருக்கின்றனர் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள். இது ஒருபுறம் இருக்க, கட்சியைத் தொடங்கிய நான்தான் அதன் தலைவர், எனது கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கிறது எனக் கூறி வருகிறார் ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ்

விவகாரங்கள் சென்று கொண்டிருக்க, பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக பாஜக கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும் என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அன்புமணி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவுடன் தான் அவர் கூட்டணி அமைப்பார் எனச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் திமுக அரசைப் பாராட்டி வரும் ராமதாஸ் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 35 சீட்டும் ஒரு மாநிலங்களவைச் சீட்டும் என அன்புமணி தரப்பு பேரத்தை முடித்துவிட்டதாம் அதிமுக.

சி.வி. சண்முகம்

இந்த நிலையில் திடீரென ராமதாஸைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சருமான மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகம் ராமதாசுடன் மிகுந்த நெருக்கமானவர். கடந்த காலங்களில் ராமதாஸை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வந்ததில் சி.வி. சண்முகத்தின் பங்கு மிக அதிகம். இந்த நிலையில் தான் தற்போது தைலாபுரத்தில் ராமதாஸைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் சண்முகம். அதிமுக கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

அதிமுக பேச்சுவார்த்தை

சில நாட்களில் சி.வி. சண்முகத்தின் சகோதரரின் மகன் திருமணம் விழுப்புரத்தில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழைத்தான் சண்முகம் ராமதாஸுக்கு வழங்கினார் எனவும் அரசியல் பேசவில்லை எனவும் ராமதாஸ் தரப்பு கூறுகிறது. அதே நேரத்தில் அழைப்பிதழை வழங்கும் சாக்கில் அன்புமணி, ராமதாஸை இணைக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கள அரசியல் சூழலை விளக்கிச் சொன்ன சி.வி. சண்முகம் விரைவில் தந்தை மகன் இருவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும், அதுதான் கட்சிக்கும் சமுதாயத்துக்கும் நல்லது என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+