போர்... யுத்தம்.. ஒரே நாடு ஒரே தேர்தல்..ஆண்டவன் கூட..சென்னையில் எடப்பாடி பழனிசாமி 'ருத்ர தாண்டவம்'
சென்னை: ஒரே ஒரே தேர்தல்தான்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சியில் பெயர் வைப்பதுதான் சாதனை; எந்த கட்டிடத்தை திறந்தாலும் தந்தை கருணாநிதி பெயர் வைத்துவிடுவார் முதல்வர் ஸ்டாலின். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஆட்சியில்தான் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. சேலத்தில் அதிமுக கட்டிய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைத்துள்ளனர். அதிமுக பெற்ற பிள்ளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்து கொண்டிருக்கிறார்.

கருணாநிதி நாடுன்னு பெயர் மாறும்?: இன்னும் கொஞ்ச நாள் போனால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டுக்கு தந்தை கருணாநிதி பெயரை வைத்து 'கருணாநிதி நாடு'ன்னு பெயர் சூட்டி விடுவார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்: விரைவிலே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளரை நீங்கல் ஆதரிக்க வேண்டும். அத்துடன் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்.. எதிர்பார்க்கின்றோம்.. தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், ஊழல் ஆட்சியான திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலை நிறைவேற்ற வேண்டும் எனில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியம்.

போர் யுத்தம்..: அதற்காக நாம் பாடுபட வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது.. போர் என்ற யுத்தம் தொடங்கிவிட்டது.. யுத்தத்திலே நாம் சந்திக்க வேண்டும். எதிரிகளை புறமுதுகு காட்டி ஓட ஓட விரட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என நம்புகிறோம். அப்படி வந்தால்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications