காவிக் கொடியால் பறிபோன பதவி.. “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்”.. டக்கென தூண்டில் போட்ட எச்.ராஜா!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்ததால் சர்ச்சை எழுந்த நிலையில், தளவாய் சுந்தரம் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்" என பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கி 99 ஆண்டு நிறைவடைந்து, 100வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தமிழகத்தில் 57 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்திருந்தார்.

தளவாய் சுந்தரம் பதவிகள் பறிப்பு: அதிமுக அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகிக்கும் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அஇஅதிமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடு மற்றும் கழகத்தின் சட்ட திட்ட விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள இருப்பதால், அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எச்.ராஜா வரவேற்பு: இந்நிலையில், திருச்சியில் பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜாவிடம், ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, "தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் தளவாய் சுந்தரம். அதற்கு முன்னதாக ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
கவலை இல்லை - தளவாய் சுந்தரம்: டெல்லியின் தமிழக பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார் தளவாய் சுந்தரம். குமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய முகமாக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியைப் பறித்தால் கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?











Click it and Unblock the Notifications