சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுசூதனன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. அதிமுகவின் புதிய அவைத் தலைவராகிறாரா பொன்னையன்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அவைத்தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து அதிமுகவின் புதிய அவைத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக சென்னையில் ரசிகர் மன்றங்களை கட்டியவர் மதுசூதனன். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினரானார். ஒருகாலத்தில் வடசென்னையின் அதிமுக முகம் என்றால் மதுசூதனன் என்கிற நிலை இருந்தது.

1991-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் கைத்தறித்துறை அமைச்சராக்கப்பட்டார் மதுசூதனன். அப்போது அதிமுக ஆட்சி மீது ஏகப்பட்ட வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருந்தவரும் மதுசூதனன்தான்.

10 வயது மகனுடன் ஆபாச நடனம் ஆடிய தாய்.. இன்ஸ்டா போஸ்ட்டால் அதிர வைத்த பெண்.. இப்படியும் ஒரு கொடுமை 10 வயது மகனுடன் ஆபாச நடனம் ஆடிய தாய்.. இன்ஸ்டா போஸ்ட்டால் அதிர வைத்த பெண்.. இப்படியும் ஒரு கொடுமை

அவைத் தலைவர் மதுசூதனன்

அவைத் தலைவர் மதுசூதனன்

இதன்பின்னர் மதுசூதனன் ஓரம்கட்டப்பட்டு வடசென்னை அதிமுக முகமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருவெடுத்தார். இதனால் ஒதுங்கிப் போன மதுசூதனன், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது மீண்டும் சீனுக்கு வந்தார். ஜெயலலிதாவால் அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்ட மதுசூதனனே ஓபிஎஸ் பக்கம் போனது ஆச்சரியப்பட வைத்தது.

உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

பின்னர் அதிமுக இணைந்த நிலையில் மீண்டும் அவைத் தலைவராகவே மதுசூதனன் இருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுசூதனனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

அப்பல்லோ சந்திப்புகளால் பரபரப்பு

அப்பல்லோ சந்திப்புகளால் பரபரப்பு

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதேநேரத்தில் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனைக்குப் போய் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மதுசூதனன் கவலைக்கிடமாக இருப்பதால் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து அதிமுக ஆலோசித்து வருகிறது.

புதிய அவைத் தலைவர் பொன்னையன்?

புதிய அவைத் தலைவர் பொன்னையன்?

இந்த பட்டியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராக இருந்த சீனியர் தலைவரான் பொன்னையன் பெயர் அடிபடுகிறது. தற்காலிகமாக அதிமுக அவைத் தலைவராக பொன்னையனை நியமனம் செய்யும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

English summary
Sources said that AIADMK will announce C. Ponnaiyan as party's new presidium Chairman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X