களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சென்னை: தவெக அரசை கண்டித்து விழுப்புரத்தில் வரும் 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், மாநிலம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டை சரிசெய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க அரசை வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக தலைமை தமது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் '5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், "கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000-க்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை தவெக அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாள்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க அரசை வலியுறுத்தி, அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டச் செயலர் இரா. பசுபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
விவசாயப் பெருங்குடி மக்கள் நலனையும், பொதுமக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!












Click it and Unblock the Notifications