சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலாவுக்கு வாழ்த்து... ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கிளப்பிய திடீர் சர்ச்சை!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் அதிமுகவில் புதிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்.

Recommended Video

    சென்னை: சசிகலாவுக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ் மகன்…அறிக்கையில் குறிப்பிட்ட‘அந்த’ வாசகம்!

    சசிகலா தமது முதல்வர் பதவியை பறித்துவிட்டாரே என்கிற கொந்தளிப்பில் தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ், அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.

    இதனால் ஓபிஎஸ்தான் சசிகலாவின் முதல் எதிரியாக இருந்து வந்தார். சசிகலாவால் கூட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. இது சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைக்குப் போகும் போது இருந்த நிலை.

     சட்டத்தில் விதி விலக்கு.. சசிகலா முதல்வராகலாமே.. சட்டத்தில் விதி விலக்கு.. சசிகலா முதல்வராகலாமே.. "தமாங்" வடிவில் வந்த 'ஒளி..' குஷியில் ஆதரவாளர்கள்!

    ஈபிஎஸ் எதிர்ப்பு- ஓபிஎஸ் மவுனம்

    ஈபிஎஸ் எதிர்ப்பு- ஓபிஎஸ் மவுனம்

    இப்போது காலமும் காட்சிகளும் மாறி நிற்கின்றன. சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையாகிவிட்டார். ஆனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவேமாட்டோம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தரப்போ, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கனத்த மவுனம் காக்கிறது.

    அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை

    அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை

    இதனிடையே சசிகலாவுக்கு வாழ்த்து போஸ்டர் அடித்தவர்கள் மீது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். இருந்தபோதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சசிகலா ஆதரவு முழக்கங்கள் அதிமுக தொண்டர்களிடத்தில் இருந்து எழுந்து வருகிறது.

    சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் வாழ்த்து

    சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் வாழ்த்து

    இதன் உச்சமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்,
    சசிகலா நலம்பெற வேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் முன் உள்ள ஒரே வாய்ப்பு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுதான். ஆனால் செய்யப்படுவாரா என்பது சந்தேகம்தான்.

    புதிய சர்ச்சை

    புதிய சர்ச்சை

    ஆனால் அது அவ்வளவு எளிதாக நடக்குமா? என்பதுதான் கேள்வி. ஜெயபிரதீப்பின் அறிக்கை ஏதோ ஆர்வக் கோளாறில் வெளியிடப்பட்ட ஒன்றாக பார்க்கவும் முடியாது. நிச்சயம் இது அதிமுகவில் பெரும் பிரளயத்தை உருவாக்குவதற்கான வெள்ளோட்டம்தான். நெல்லையில் ஒரு பிரமுகர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததால் சஸ்பெண்ட் ஆனார். ஆனால் ஜெயபிரதீப் விவகாரத்தில் என்ன மாதிரியான அளவுகோல் கையாளப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    AIADMK may take action Against O Panneerselvam Son Jaya Pradeep for wishes to Sasikala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X