பாஜக பக்கம் போறீங்களாமே.. பிரேமலதாவை சந்தித்த அதிமுக "முதலை".. விடாமல் தொடரும் எடப்பாடி.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான மெகா கூட்டணியை பாஜக உருவாக்கி விடாமல் தடுப்பதற்கான தீவிரமான முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். இதற்காக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரை தேமுதிக தலைவர்களை சந்திக்கும்படி எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளாராம்.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

AIADMK trying hard to convince DMDK to break BJP alliance talks in Lok Sabha elections 2024

அதிமுக ஆலோசனை: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

AIADMK trying hard to convince DMDK to break BJP alliance talks in Lok Sabha elections 2024

முக்கியமாக பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக அதிமுக்கிவிடம் செல்லவில்லை.

பாமக, தேமுதிக, இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வருகின்றன.

அதன்படி பாமக 10 சீட். தேமுதிக 4 சீட் என்று பாஜக கூட்டணிவர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் இதை பாஜக ஏற்கவில்லை. ராஜ்ய சபா சீட் கிடையாது மாறாக பணம் கேட்டதில் மூன்றில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம்.

பாமக -10
தேமுதிக -4
டிடிவி தினகரன் -4
ஓபிஎஸ் -2
பாஜக - 11
ஐஜேகே-1 , மற்றவை-2
புதிய தமிழகம் -2
தமிழ் மாநில காங்கிரஸ் -2 என்று கூட்டணி முடிவாக உள்ளதாம்.

AIADMK trying hard to convince DMDK to break BJP alliance talks in Lok Sabha elections 2024

ஆள் அனுப்பிய எடப்பாடி: இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான மெகா கூட்டணியை பாஜக உருவாக்கி விடாமல் தடுப்பதற்கான தீவிரமான முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். இதற்காக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரை தேமுதிக தலைவர்களை சந்திக்கும்படி எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளாராம்.

அதன் ஒரு கட்டமாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தை சந்திக்க அதிமுகவின் டாப் லீடர் ஒருவரை எடப்பாடி அனுப்பி உள்ளாராம். அவரிடம் லோக்சபா தேர்தலில் 2 - 4 இடங்கள ஒரே ஒரு ராஜ்ய சபா தொகுதியை கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாம். பொதுவாக தேமுதிக அதிக இடங்களை கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை.. இடங்களை குறைவாக கேட்டு.,. ஒரு ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொளகிறோம். எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று தேமுதிகவிடம் அந்த அதிமுக தலைவர் ஆபர் கொடுத்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+