தவெகவை கூட்டணி நோக்கி நகர்த்தும் அதிமுக.. எதிர்க்க தயாராகிவிட்ட திமுக.. சட்டசபையில் நடந்த சம்பவம்!
சென்னை: சட்டசபையில் நேற்று அரங்கேறிய சம்பவங்கள் மூலமாக அதிமுக - தவெக கூட்டணியை எதிர்க்க திமுக தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் தவெகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி பற்றிய பேச்சுகளுக்கு தவெக அமைதி காத்து வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இம்முறை திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் தவெகவினரின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களாக தலைமறைவாக இருந்துவிட்டு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பின் உடனடியாக வெளி வந்தார். அதேபோல் தவெக தலைவர் விஜய் கரூர் செல்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சட்டசபையில் நேற்று அரங்கேறிய சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் தவெக சார்பாக பேசப்பட்டு வந்த விஷயங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவை அனைத்திற்கும் ஏற்கனவே தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக எழுந்து, கூட்டணிக்காகவே அதிமுக இப்படி செய்கிறது.
அதிமுகவினர் பாதிக்கப்பட்டால் கூட இப்படிப்பட்ட குரல் அதிமுகவிடம் இருந்து வந்து இருக்குமா என்று தெரியவில்லை. கூட்டணிக்கு ஆள் சேர்க்கவே எதிர்க்கட்சித் தலைவர் பேசி வருகிறார். எந்த கூட்டணி அமைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு பலன் தராது. எந்த மெகா - மகா கூட்டணி வைத்தால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தவெகவுடன் கூட்டணி அமைக்கவே அதிமுக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஏனென்றால் அதிமுக - தவெக இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அதிமுக உடன் கூட்டணி அமைக்க தவெகவை பல்வேறு தரப்பும் நெருக்கி வருவதாக பார்க்கப்படுகிறது.
அதனை திமுக தலைமை நன்றாக அறிந்து வைத்துள்ளது. இதனால் அதிமுக - தவெக கூட்டணியை எதிர்கொள்ள திமுக தயாராகிவிட்டது என்பதை சட்டசபையில் வைத்தே ஸ்டாலின் நேரடியாக கூறி இருக்கிறார். இதனால் டிசம்பர் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி - விஜய் இடையிலான சந்திப்பு நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications