Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களோட வாங்க.. விஜய்யை அழைக்கும் அதிமுகவின் 2ம் கட்ட தலைகள்.. தடுக்காத எடப்பாடி.. பின்னணி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்த நேரம் தொடங்கியதில் இருந்தே அதிமுகவுக்கு தமிழக வெற்றிக் கழகம் மீது தனிப்பாசம் இருந்து வருகிறது. தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தி இருந்தார். இதனால் அதிமுகவை விஜய் சீண்டிய போதும், அவர்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தொடக்க நிலையிலேயே தவெக தரப்பில் மிகப்பெரிய டிமாண்ட் வைக்கப்பட்டதால், அதிமுக உடனடியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனாலும் தவெகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருந்து வருகிறது.

AIADMK TVK Alliance

அண்மையில் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த தவெக கொடியை பார்த்து, "கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்று ஆர்வத்துடன் தெரிவித்தார். அதேபோல் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு நேரடியாக ஆதரவு கொடுத்ததோடு, தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சட்டசபையிலேயே எடப்பாடி பழனிசாமி தவெகவின் குரலாக பேசி இருப்பதாக பார்க்கப்பட்டது.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு உள்ளிட்ட பலரும் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று நேரடியாக பேசிவிட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமியின் விஸ்வாசியான ஆர்பி உதயகுமார் பேசியுள்ள வார்த்தைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதில் ஆர்பி உதயகுமார், திமுகவை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நிற்க வேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால், அது வேறு விதமாக அமைந்துவிடும். சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவு எடுக்கவில்லை.

ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து, ஆந்திராவில் துணை முதல்வராக இருக்கிறார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் எதிர்பார்த்து உள்ளார்கள். அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதனை நழுவவிடக் கூடாது. விஜய் அதிமுகவுடன் பயணம் செய்ய வேண்டும். அதுதான் மக்கள் எண்ணமாக உள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, தவெகவையும் ஆண்டவனால் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்தார். ஆர்பி உதயகுமார் நேரடியாக விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைத்துள்ளதோடு, பவன் கல்யாணையும் எடுத்துக்காட்டாக கூறி இருக்கிறார். இதனால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக மறைமுக செய்தியும் அடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், கள நிலவரம் அந்த கூட்டணிக்கு எதிராக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரியளவில் ஆதரவு இல்லை. இதனால் இந்த இரு தரப்பின் ஆதரவுடன் இருக்கும் விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கமாக இருப்பதாக தெரிகிறது.

அதேபோல் தவெக தலைவர் விஜய்யை கூட்டணிக்கு அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் அழைப்பதை எடப்பாடி பழனிசாமி தடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவரே விஜய்யை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். இதனால் விஜய்யுடன் இணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதை அதிமுக 2ஆம் கட்டத் தலைவர்கள் நம்ப தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+