சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடி வயிற்றில் புளியை கரைக்கும் 4 தொகுதி தேர்தல்.. கட்சியினரை முடுக்கி விடும் அதிமுக தலைமை.. !

4 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தரப்பு முழுவீச்சில் இறங்கி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓட்டப்பிடாரரத்தில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம்- வீடியோ

    சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து உளவுத்துறை அளிக்கும் ரிப்போர்ட்டுகளை பார்த்து அதிர்ந்து அப்செட் ஆகி உள்ளதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு!

    எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் ஒரு பக்கம் பிளானில் இருக்கிறார். மற்றொரு பக்கம், எம்பி தேர்தலைவிட இடைத்தேர்தலையே பெரிதாக நினைக்கிறார் டிடிவி தினகரன். அதனால் கடும் சிக்கலில் உள்ளது எடப்பாடி அரசு.

    வருகிற இடைத் தேர்தலில் அக்கட்சி குறைந்தது 9 இடங்களில் வென்றாக வேண்டும். அப்படி நடந்தால்தான் ஆட்சியைக் காப்பாற்ற முடியும். ஒரு இடம் குறைந்து வென்றால் கூட ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே லோக்சபா தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தல்தான் அதிமுகவுக்கு மிக மிக முக்கியம்.

    படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி.. இது நியாயமா.. ராஜேஸ்வரி பிரியா பாய்ச்சல் படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி.. இது நியாயமா.. ராஜேஸ்வரி பிரியா பாய்ச்சல்

    சிக்கல்

    சிக்கல்

    ஒருவேளை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியிருந்தால் சிக்கலை அதிமுக சமாளிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைய 18 தொகுதிகளுக்கும் தேர்தல் என்பது ஒரு வகையில் ஆபத்துதான். இந்த 18-ல் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள் என்பது அடுத்த கேள்வி!

    சாதகமான ரிப்போர்ட்

    சாதகமான ரிப்போர்ட்

    அதிலும் 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து உளவுத்துறை உடனுக்குடன் ரிப்போர்ட் கொடுத்து வருகிறதாம். அப்படி சொல்லப்படும் முடிவுகள் எல்லாமே திமுக, அமமுகவுக்கு சாதகமாகவே சொல்கிறார்களாம். ஏனென்றால், அமமுக, திமுகவும் 4 தொகுதிகளிலும் விழுந்தடித்து வேலைகளை செய்து வருகிறார்களாம். நிறைய உள்ளடி வேலைகள், களப்பணிகள் என பரபரப்பாகிவிட்டார்கள். இதனால் உளவுத்துறை தரும் ரிப்போர்ட்டுகளும் பகீரை தருவது போலவே இருக்கிறதாம் ஆளும் தரப்புக்கு!

    செந்தில்பாலாஜி

    செந்தில்பாலாஜி

    அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிதான் வேட்பாளர் என்றதுமே அதிமுக, அமமுக தரப்பினருக்கு அடிவயிற்றில் புளியை கரைத்தது. ஏனென்றால், செந்தில்பாலாஜி முன்பு யாரை கொண்டு போய் வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் காணாமலே போய்விடும் அளவுக்கு தொகுதியில் செல்வாக்கு நிறைந்தவர்!

    கங்கணம்

    கங்கணம்

    10 பேர் கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்ட குழு இந்த அரவக்குறிச்சி வெற்றிக்காகவே நியமிக்கப்பட்டாலும், எம்ஆர் விஜயபாஸ்கர் தனிப்பட்ட முறையில் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தாலும், செந்தில்பாலாஜி வெற்றி பெறுவதே உறுதி என்கிறார்களாம். அதனால் அரவக்குறிச்சி அதிமுகவுக்கு பெரிய சவாலாக உள்ளது.

    பொறுப்பாளர்கள்

    பொறுப்பாளர்கள்

    அரவக்குறிச்சிதான் கையை விட்டு போயிடும் போல இருக்கு.. சூலூரையாவது தக்க வைக்கணும் என்று தேர்தல் பொறுப்பாளர்களிடம் வெளிப்படையாகவே டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாம். ஆனால் ஏற்கனவே 4 தொகுதிகளிலும் அமமுக, திமுக பொறுப்பாளர்கள் முகாமிட்டு வரும்நிலையில், மறுபுறம் உளவுத்துறை ரிப்போர்ட் ஏடாகூடமாக வரும் நிலையில்.. என்ன செய்வதென்றே தெரியாமல் புது புது ஐடியாக்களில் இறங்கி உள்ளதாம் அதிமுக தரப்பு!

    English summary
    CM Edapadi Palanisamy upset over IB report on 4 constituency by election sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X