உண்ணாமலை ஆக்கிடுவோம்.. கமலாலயம் போய் வச்சு செய்வோம்.. கொதித்த அதிமுக பெண் நிர்வாகிகள்
சென்னை: இனி அண்ணாமலை எங்கம்மாவை பற்றி பேசினா.. நேராக கமலாலயம் போய் ஆபிஸையே வச்சு செய்வோம்.. என்று ஒரு பெண் கொந்தளித்தார். இன்னொரு பெண்ணோ, இனி அண்ணாமலை எங்கள் அம்மாவை பற்றி பேசினால், செருப்புதான் பதிலாக வரும் என்றார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தலைவர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்பட பலரும் நேரடியாக அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளனர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானமே இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடமே அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக கொந்தளித்தனர்.
இந்நிலையில் அதிமுக பெண் நிர்வாகிகள் பலர் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். கூட்டணியை எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாதவராக உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
அண்ணாமலை சாப்பிடும் சாப்பாடு முதல், போடும் உள்ளாடை வரை அனைத்து ஓசி என்று ஒரு பெண் மிக கடுமையாக பேசினார். அண்ணா திமுக கட்சியை பற்றி அண்ணாமலை பேசினார் என்றால் உண்ணாமலை ஆக்கிடுவோம் என்று பெண்கள் மொத்தமாக கொந்தளித்தனர்.

அம்மா என்ன ஊழல் செய்தார் என்று அண்ணாமலை பார்த்தார்? அம்மா எங்களுக்காகவே வாழ்ந்தார். அவருக்கு மைக் கிடைச்சா என்ன வேண்டுமானாலும் பேசுவாரா? தலைமை எங்களுக்கு உத்தரவு கொடுக்கட்டும் , அதுக்கு அப்புறம் அண்ணாமலைக்கு நாங்கள் யாருன்னு காட்டுறோம் என்று அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் கூறினார்.
அண்ணாமலை வந்து அம்மாவிற்கு கால் தூசிக்கு கூட வரமாட்டார். அவருக்கு அம்மாவை பற்றி பேச எந்த தகுதியுமே இல்லை இன்னொரு பெண் நிர்வாகி கூறினார். பெண்கள் என்று இல்லை. அதிமுகவை சேர்ந்த ஆண் நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்தனர்.
"அண்ணா திமுக இல்லை என்றால், இந்த நான்கு சீட் கூட பாஜகவினர் வாங்கியிருக்க மாட்டார்கள். நாக்கை அடக்கி வைச்சு பேசணும். அம்மாவை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது.
கர்நாடாகவில் ஊழல் ஆட்சின்னு முதலமைச்சரையே தகுதி நீக்கம் பண்ணுனாங்க.. இங்க வந்து பேச அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. மூத்த அரசியல்வாதிகள், அரசியல் தெரிந்தவர்கள் யாருமே இப்படி பேசமாட்டார்கள். கூட்டணி குறித்து டெல்லி மேலிடத்தில் அமித்ஷா, மோடி ஆகியோர் தான் முடிவு செய்ய வேண்டும். இவர் முடிவு செய்ய எந்த அதிகாரமும் கிடையாது. இவர் தினமும் மீடியாவில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அண்ணாமலைக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. சிறு பிள்ளை போல் பேசுகிறார்" என்று அதிமுக ஆண் நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர் . பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக நிர்வாகிகள் பேசிய கருத்துக்களின் தொகுப்பை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications