சைலண்டாக எடப்பாடி.. வைலண்டாக பாஜக! அதிமுக தலைமை மேல் கடும் கோபத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்!
சென்னை: அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு என பாஜக இணை அமைச்சர் எல்.முருகன் பேசி இருப்பது அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட கேள்வி எழுப்பிய நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஜெயலலிதா இருந்தவரை ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் என பெயர் பெற்ற அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்து பிளவுகள் ஏற்பட்ட நிலையில் 2017இல் ஓபிஎஸ் எடப்பாடி இணைந்து ஆட்சியை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நடத்தினர்.
இருவரும் சேர்ந்ததற்குப் பின்னணியில் பாஜக இருந்ததாகக் கூறப்பட்டது. 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. அதன் காரணமாகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக சட்டமன்றத்தில் நுழைந்தது.

பாஜக கூட்டணி
தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதும் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படத் துவங்கியது. அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேச அதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அண்ணாமலையின் பேச்சால் பாஜக- அதிமுக கூட்டணியும் முடிவுக்கு வந்தது. ஆனால் அப்போது வரை எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக
தொடர்ந்து 2024இல் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக தனித்தனி அணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில் சில தொகுதிகளில் பாஜகவால் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது அதிமுக. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி இணைந்திருக்கிறது. கரங்கள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது போலத்தான் இருக்கிறது கூட்டணியின் நிலைமை. மீண்டும் பாஜக கூட்டணி அமைந்ததால் ஜெயக்குமார் உள்ளிட்ட சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆர்எஸ்எஸ்
அதே நேரத்தில் பாஜக மூலம் அதிமுகவை ஆர்எஸ்எஸ் இயக்குவதாக திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் ஆர்எஸ்எஸ் அதிமுகவை வழி நடத்தினால் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பினார். இது அதிமுக தொண்டர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. சில இரண்டாம் கட்ட தலைவர்களும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளான விசிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றன.
கூட்டணி பிரச்சனை
ஆனால் அதிமுகவுக்கும் கூட்டணிக்கும் தலைமை வகிப்பதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி இதுவரை பேசாமலேயே இருக்கிறார். கடந்த ஆட்சிக் காலத்தில் பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்கள் குறித்து விமர்சித்த போதும் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன என்ற கேள்வியை வெளிப்படையாக முருகன் முன் வைத்திருக்கும் நிலையில் அது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா
ஜெயலலிதா இருந்திருந்தால் கூட்டணி அமைந்திருக்குமா? கூட்டணி அமைந்திருந்தாலும் இப்படி பாஜக தலைவர்கள் பேசுவார்களா? என சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர் அதிமுக தொண்டர்கள். அதே நேரத்தில் பாஜகவுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications