அடுத்த விக்கெட்.. ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது! விஜயை புகழ்ந்த மருது அழகுராஜ்!
சென்னை: ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜயை புகழ்ந்து வரும் அவர் விரைவில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக 'ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026ஐ தீர்மானிக்க போகிறது என விஜய் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு அடுத்த இடத்தில் அதிகாரமிக்க நபராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியிலும் ஆட்சியிலும் பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார் ஜெயலலிதா.

அவரது மறைவுக்கு பிறகு கட்சி வேட்டியை கூட அணிய முடியாத நிலை ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைக் காப்பாற்ற உதவிய அவர் தற்போது அவராலேயே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
தற்போது இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் உற்சாகத்தில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. அதே நேரத்தில் நாளுக்கு நாள் ஓபிஎஸ் ஆதரவு வட்டம் சரிந்து வருகிறது. தற்போதைய சூழலில் ஒரு சில தலைவர்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர். மனோஜ் பாண்டியன், வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் மட்டுமே தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருக்கின்றனர்.
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருந்த செம்மலை, மாபா பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி தரப்பில் தஞ்சம் புகுந்து விட்டனர். மேலும் ஓபிஎஸ் தரப்பில் தீவிர ஆதரவாளர்களாக இருந்த கு.ப.கிருஷ்ணன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற ஒரு குழுவை ஆரம்பித்து தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் மிகத் தீவிரமாக எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வந்தவர் மருது அழகுராஜ். தற்போது அவரும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து கழன்று விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் பயணிப்பவர் 2004 ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்தவர், 2006 தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு நிறைய வாக்குகளை பெற்றிருந்தார். தொடர்ந்து 2009ல் அதிமுகவில் இணைந்த அவர் ஜெயலலிதாவுக்கு பல முக்கிய உரைகளையும் அறிக்கைகளையும் தயாரித்து கொடுத்தவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தொடங்கிய டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து உருவாக்கிய நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்தார். 2021ல் திருப்பத்தூரில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் பெரிதான நிலையில் ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார். தொடர்ந்து நமது அம்மா ஆசிரியர் பணியை விட்டு விலகி ஓபிஎஸ்-ன் மிக தீவிரமான ஆதரவாளராக மாறினார்.
மேலும் ஓபிஎஸ் தொடங்கிய நமது புரட்சித்தொண்டன் இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதிருப்தியில் இருக்கும் மருது அழகுராஜ் அவர் அணியிலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட," மக்கள் தளபதி விஜய் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிற போது இளைஞர்கள் பெண்களிடம் அவருக்கான ஆதரவு பற்றி எரியப்போகிறது. அவரது சூறாவளிப் பயணம் முடிந்து புழுதி அடங்கவே பல நாட்கள் ஆகக்கூடும். தவெக தலைமையில் அதிகாரப் பங்கேற்புக்கு பல கட்சிகளும் அணிவகுக்கும்.. அவர் பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாவதை உணர்ந்தே அவருக்கு மத்திய அரசு Y-பிரிவு படைவீரர்கள் பாதுகாப்பை வழங்க முன்வந்திருக்கிறது." என கூறியிருந்தார்.
இதே போல மேலும் பல பதிவுகளையும் வெளியிட்டு வந்த அவர் தற்போது புதிய பதிவு ஒன்றை விஜய் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் 'ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது அதுதான் 2026ஐ தீர்மானிக்கப் போகிறது" என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் விஜய் கட்சியில் அவர் இணைய இருப்பது உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
-
சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சாரத்தை வழிமறித்த பறக்கும் படையினர்! பரபரப்பு! -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
கொடுமை.. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பிடித்து தொங்கிய தொண்டர்கள்.. காலால் மிதித்த பவுன்சர்! -
லீக் ஆன ‘ஜனநாயகன்’ பட காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? விஜய்யிடம் அமீர் கேட்ட கேள்வி! -
Jana Nayagan: ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழிங்க.. கிரிமினல் நடவடிக்கை பாயும்.. கேவிஎன் நிறுவனம் வார்னிங் -
விஜய்யை விட பல மடங்கு அதிகம்.. சீமான் அஃபிடவிட்டை டவுன்லோடு செய்தவர்கள் இவ்வளவு பேரா? -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
ஒரே பெயரில் பலர் போட்டி! சென்னையில் விஜய் உள்பட தவெக –அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்! லிஸ்ட் இதோ -
திருச்சி கிழக்கு தொகுதியில் ‘டபுள்’ விஜய்.. மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டி! முழு லிஸ்ட் இதோ! -
"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருங்க.." புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்!











Click it and Unblock the Notifications