Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்சை மாற்றுங்க.. சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதிமுகவை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் ஒற்றை தலைமையாக உருவெடுத்தார். அதோடு ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்பட அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்குவதாக பொதுக்குழு மூலம் அறிவித்தார்.

Aidmk Former Minister meets Speaker Appavu on the issue of the Deputy Leader of the Opposition

இதை எதிர்த்து சட்ட போராட்டங்கள் நடத்திய ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீதிமன்ற தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வரவே தற்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சியின் கொடியையும் பெயரையும் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு ஓபிஎஸ் பதிலளிக்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ்க்கு எதிராக அடுத்தடுத்த மூவ்களை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதமும் பேரவை தலைவர் அப்பாவுவிடம் கொடுக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து நடந்த சட்டசபை கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையை அப்பாவு மாற்றவில்லை. இதற்கு சட்டப்பேரவையிலும் கடுமையான எதிர்ப்பை அதிமுக தெரிவித்து வந்தது. பல முறை அதிமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டாலும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று இல்லை எனவும் அதிமுக தலைமை பதவி விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சபாநாயகர் அப்பாவு சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ள சூழலில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். செங்கோட்டையன், சி விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அப்பாவுவை தலைமை செயலகத்தில் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.

வரும் அக்டோபர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், சபாநாயகரை சந்தித்து மீண்டும் மனுவை அளித்துள்ளனர். ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரது இருக்கைகளையும் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அளித்த கோரிக்கை மனு விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இந்த முறை எந்த மாதிரியான முடிவு எடுக்க போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+