விமானம் கிளம்பும் நேரம் பைலட்டை காணோம்.. திடீரென ஓய்வெடுக்க சென்றதால் சென்னையில் பயணிகள் தவிப்பு!
சென்னை: இப்போது விமானங்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வினோதமான ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பைலட் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதால், பெங்களூர் செல்லவிருந்த பயணிகள் தவித்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் விமான கட்டணங்களின் விலை கணிசமாகக் குறைந்தே வருகிறது. ஏது ரூ.2000+ மேல் தான் இருக்கு.. இது குறைவா என கேட்க வேண்டாம்..

விமான டிக்கெட்: கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சராசரியாக விமான டிக்கெட் விலை கணிசமாகக் குறைந்தே இருக்கிறது. அதிக பேர் விமானங்களில் பயணிப்பது, எரிபொருளை மிச்சப்படுத்தும் விமானங்கள் சந்தைக்கு வந்துள்ளது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டில் லோ காஸ்ட் கேரியர் எனப்படும் குறைந்த டிக்கெட் விலை கொண்ட விமானங்களுக்கே மவுசு அதிகம். நமது நாட்டில் இப்போது வெற்றிகரமான விமான நிறுவனமாக இருப்பது இண்டிகோ தான். சமீபத்தில் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கிய நிலையில், அது இண்டிகோவுக்கு போட்டியாக வரும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: ஏர் இந்தியா நிறுவனம் இண்டிகோவுக்கு போட்டி தர தனியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வைத்துள்ளது. இதில் டிக்கெட் விலை குறைவாக இருக்கும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை இப்போது தான் மெல்ல விரிவடைந்து வருகிறது. இதற்கிடையே சென்னை ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வினோத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது: மோசமான வானிலை காரணமாகப் பெங்களூருக்குச் செல்லவிருந்த விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது. சென்னையில் அந்த விமானம் வழக்கம் போலத் தரையிறங்கியுள்ளது. கொஞ்ச நேரத்திலேயே பெங்களூரில் வானிலை சீரான நிலையில், சென்னையில் இருந்து அந்த விமானம் பெங்களூருக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரம் பார்த்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால் பயணிகள் தவித்தனர்.
அதாவது அனைத்து பைலட்களும் தொடர்ச்சியாக இத்தனை நேரம் தான் விமானத்தை இயக்க வேண்டும் என்று கடுமையான விதி இருக்கும். பாதுகாப்பு கருதியே இந்த விதி இருக்கிறது. குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுத்த பிறகே பைலட்கள் மீண்டும் விமானத்தை இயக்க வேண்டும். இதன் காரணமாகவே அந்த பைலட் ஓய்வெடுக்க சென்றதாகத் தெரிகிறது. இதனால் பெங்களூர் செல்ல இருந்த 168 பயணிகள் சென்னை ஏர்போர்ட்டில் தவித்தனர். ஓய்வுநேரம் முடிந்து விமானி வந்த பிறகு விமானம் புறப்படும் என தெரிகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications