கார்த்தி சிதம்பரம் உள்பட 117 பயணிகளோடு மதுரை சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. அவசரமாக தரையிறக்கம்
சென்னை: மும்பையில் இருந்து மதுரைக்கு நடுவானில் பறந்து வந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம், சிப்பந்திகள், பயணிகள் என 124 பேர் இருந்தனர். விமானம் உரிய நேரத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 124 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 117 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் பயணம் செய்துள்ளார். இந்த விமானம் மதுரைக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் அதாவது பிற்பகல் 2.30 மணியளவில் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்டதற்கான அபாய எச்சரிக்கை சிக்னல் வந்தது. இதையடுத்து அவசர அவசரமாக விமானம் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது. மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு இந்த விமானம் சென்றது. இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து உடனடியாக விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திரக் கோளாறை உரிய நேரத்தில் கண்டறிந்து லாவகமாக செயல்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்துள்ளார்.
விமானத்தை பாதுகாப்பாக சென்னையில் தரையிறக்கிய விமானிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். விமானம் உரிய நேரத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த கார்த்தி சிதம்பரம் உள்பட 124 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்தின் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதன் பின்னர் விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்றும், அதனை சரி செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 124 பயணிகளையும் வேறு ஒரு விமானம் மூலமாக மதுரை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications