போகி பண்டிகை கொண்டாட்டம்.. சென்னையை சூழ்ந்த காற்று மாசு! இந்த ஆண்டு டபுள் மடங்காக உயர்வு
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று போகி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் பழை பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும். இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி போகி பண்டிகையான இன்று அதிகாலை உற்சாகமாக மேளம் அடித்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்து பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

இதனால் சென்னை காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி அரும்பாக்கத்தில் காற்று தர குறியீடு 200ஆக உயர்ந்திருக்கிறது. கொடுங்கையூரில் 154, எண்ணூரில் 217, மணலி 277, ராயபுரம் 199 என காற்று மாசு அதிகரித்திருக்கிறது. இந்த குறியீட்டின் படி 200க்கும் அதிகமாக காற்று மாசு அடைந்திருந்தால் அது சுவாசிக்க ஏற்கத்தக்கதல்ல.
கடந்த ஆண்டை பொறுத்த அளவில் இந்த ஆண்டு மாசு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு போகி கொண்டாட்டத்தின் போது ஆலந்தூர் 155, பெருங்குடி 113, கொடுங்கையூர் 94 , மணலி 87, அரும்பாக்கம் 86, வேளச்சேரி 84, ராயபுரம் 82 என காற்று மாசு பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications