184ஐ தாண்டிவிட்டது.. போகி புகைக்கு இடையே.. சென்னையில் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்த காற்றின் தரம்!
சென்னை: சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. Air Quality Index (AQI) எனப்படும் மதிப்பு 184ஐ தாண்டி உள்ளது. பொதுவாக சென்னையில் இது 60-80 என்ற அளவில் இருக்கும். ஆனால் போக்கி காரணமாக நிலைமை மோசமாகி உள்ளது. போகிப் பண்டிகை கொண்டாட்டம் இடையே பழைய பொருட்களை மக்கள் எரித்த காரணத்தால் கடும் மாசுபாடு ஏற்பட்டது. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது.
Air Quality Index (AQI) 180 ஐ தாண்டும் சமயங்களில் அதை சுவாசிக்க கூடாது. இதன் அர்த்தம் அந்த காற்று ஆரோக்கியமற்ற காற்று ஆகும். சென்னையில் இப்போது காற்றின் தரம் அவ்வளவு மோசமாகி உள்ளது.

போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர் .இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களால் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை ஏற்பட்டது. சென்னையில் பல பகுதிகளின் Air Quality Index (AQI) இங்கே தரப்பட்டு உள்ளது. இதில் ராயபுரத்தில் மதிப்பு 200ஐ தாண்டி மோசமான நிலையை அடைந்துள்ளது.
அபிராமபுரம் 184
அபிராமபுரம் 184
அச்சுதன் நகர் 173
ஆலந்தூர் பேருந்து நிலையம் 199
அந்தோணிப்பிள்ளை நகர் 164
அரும்பாக்கம் 186
சென்னை அமெரிக்க தூதரகம் 190
காந்தி நகர் எண்ணூர் 187
இன்டக் நகர் 187
கொடுங்கையூர் 187
கொரட்டூர் 195
குமாரசாமி நகர் 168
மணலி 186
முத்தமிழ் நகர் 195
நீலங்கரி 161
பெருங்குடி 156
பொத்தேரி 187
ராயபுரம் 216
ஸ்ரீதேவி காலனி 181
ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி 187
திருமுருகன் சாலை 199
வேளச்சேரி ரெஸ். பகுதி 170
விமான சேவை பாதிப்பு: அந்த வகையில் தற்போது சென்னையில் விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது.
ஓடுதளம் தெரியாத அளவிற்கு சாலைகளில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. போகிப் பண்டிகை கொண்டாட்டம் இடையே பழைய பொருட்களை மக்கள் எரித்த காரணத்தால் கடும் காற்று மாசு ஏற்பட்டது. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது.
பொங்கல்:
போகி என்பது நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாகும். மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்திக்கு முந்தைய நாள் என்று இது அழைக்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
போகி நாளில், மக்கள் பழைய விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய விஷயங்களில் கவனம் செலுத்தி மாற்றம் அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள். விடியற்காலையில், மக்கள் வீட்டில் மரக் கட்டைகள், மற்ற திட எரிபொருள்கள் மற்றும் பயனற்ற மர சாமான்களைக் கொண்டு நெருப்பை கொளுத்துவார்கள். இதன் மூலம் ஆண்டுக் கணக்குகள் முடிவடைந்து, மறுநாள் அறுவடையின் முதல் நாளில் புதிய கணக்குகள் தொடங்கும். அதாவது தமிழ் புத்தாண்டும் இதற்கு மறுநாள்தான் தொடங்கும்.
பொங்கல் பண்டிகையின் போது மழை பொழிய வேண்டி இந்திரனை மக்கள் வழிபடுவதும் சில பகுதிகளில் வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலுமே பொங்கல் பண்டிகையின் நோக்கம் ஆகும்.
கொங்கு பகுதிகளில் இதே நாளில் காப்பு கட்டு விழாக்கள் நடப்பதும் வழக்கம். போகிக்கு மறுநாள் பொங்கல் செய்து சாப்பிடுவார்கள். மகாராஷ்டிராவில், மக்கள் பஜ்ராவில் செய்யப்பட்ட ரொட்டியை டில் தூவி சாப்பிடுகிறார்கள் மற்றும் காய்கறி குழம்புகளை செய்வார்கள், இதில் பாலக், கேரட், பட்டாணி, பச்சை சானா, பப்டி போன்றவை அடங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications