ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் மீண்டும் கைது.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடுத்து நடந்தது என்ன?
சென்னை: ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் ராயப்பேட்டை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பரந்தாமன் என்பவர் ஏற்கனவே கைதாகி உள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த வழக்கிலும் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினார்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 பேர் செருப்பை வைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.

சிறிய கத்தி
அப்போது பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து விசிகவினரை ஏர்போர்ட் மூர்த்தி தாக்கினார். இதில் அவரை செருப்பால் தாக்கிவிட்டு தப்ப முயன்றன விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸ் நிலையத்தில் இருதரப்பு சார்பிலும் மாறி மாறி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொலை முயற்சி வழக்கு
இதனிடையே விசிகவினரை தாக்கிய விவகாரத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை முயற்சி வழக்கும் பாய்ந்தது. இந்த வழக்கில் அவரை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தி ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
வாடகை வீடு சொந்தம்
இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் ராயப்பேட்டை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பரந்தாமன் என்பவர் ஏற்கனவே கைதாகி உள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த வழக்கிலும் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினார்கள்.
நீதிமன்றம் மறுப்பு
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் ஏர்போர்ட் மூர்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். புதிய வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லாததால் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட கோர்ட்டு மறுத்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. அதேநேரம் குண்டர் சட்டம் மற்றும் கொலைமுயற்சி வழக்கு காரணமாக ஏர்போர்ட் மூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குண்டர் சட்டம் எப்படி
குண்டர் சட்டத்தை பொறுத்தவரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து தான் நிவாரணம் பெற முடியும். அதாவது குண்டர் சட்டம் எந்த அடிப்படையில் போடப்பட்டது என்பது குறித்தும் வாதம் வைத்து, அது தவறு என நிரூபித்து மட்டுமே ஜாமீன் பெற முடியும். சாதாரண மற்ற வழக்குகளை போல் இதில் ஜாமீன் பெற முடியாது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications