சென்னையில் முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க்.. 5 மணிநேரமாக பொதுமக்கள் கடும் அவதி.. என்ன காரணம்?
சென்னை: சென்னையின் பல இடங்களில் கடந்த 5 மணிநேரமாக ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போன் பேச முடியாமலும், இணைய சேவையை பயன்படுத்த முடியாமலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் தொலை தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் பல கோடி மக்கள் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று திடீரென்று ஏர்டெல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் போன் பேச முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இணைய சேவையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் நுங்கம்பாக்கம் உள்பட பல இடங்களில் இந்த பாதிப்பு உள்ளது.
சில இடங்களில் நெட்வொர்க் என்பது குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கிறது. இந்த சமயத்தில் போன் கால் செய்தாலும் கூட எதிர்முனையில் பேசுவோரின் வாய்ஸ் சரியாக கேட்காமல் உள்ளது. மேலும் இணைய சேவையை என்பது ‛டெட் ஸ்லோவாக' இருக்கிறது. வாட்ஸ்அப்பில் வரும் சாதாரண போட்டோக்களை கூட டவுன்லோட் செய்ய அதிக நேரம் எடுக்கிறது.
சென்னையில் இன்று மாலையில் தொடங்கிய இந்த பிரச்சனை இன்னும் கூட தீரவில்லை. இதனால் நெட்வொர்க் இன்றி பொதுமக்கள் செல்போன்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் கடும் கோபத்துக்குள்ளாகி உள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க் பற்றி அவர்கள் எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட வலைதள பக்கங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ஏர்டெல் நெட்வொர்க் பிரச்சனையை வெளிப்படுத்தும் வகையில் மீம்களை சிலர் வலைதளங்களில் பகிர்ந்த வருகின்றனர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக ஏர்டெல் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றி ஏர்டெல் விளக்கம் அளித்தால் தான் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்பது தெரியவரும்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications