கஸ்டமர்களின் தலையில் விழுந்த இடி.. ப்ரீபெய்ட் கட்டணம் உயர போகிறதாம்.. ஏர்டெல் அறிவிப்பு
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் உயர போகிறதாம்.. நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்த உள்ளது.. அந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஏர்டெல் பயன்பாட்டாளர்கள் அதிகம் உள்ள நிலையில், போஸ்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இதில், கடந்த ஜூலை மாதத்தில் ஏர்டெல் அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதத்தினை அதிகரித்திருந்தது.. இப்போது ப்ரீபெய்டுக்கும் கட்டண விகிதத்தினை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

கட்டணங்கள்
மொபைல் சேவை வழங்குநரான பார்தி ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதங்களில் மாற்றம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது... 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28 நாட்கள் 2GP மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆக உயர்த்தப்படுகிறது.

எஸ்எம்எஸ்
ஏர்டெல் அறிவித்துள்ள இந்த புதிய கட்டண விகிதங்கள் நவம்பர் 26 முதல் அமலுக்கு வர உள்ளது.. எஸ்எம்எஸ் சேவை வேண்டுமானால், ரூ.149க்கு பதிலாக ரூ.179 செலவழிக்க நேரிடும்.. அதன்படி இந்த திட்டத்தில் 20% உயர்த்தப்பட்டுள்ளது... அதேபோல் ரூ.219 திட்டம் இப்போது ரூ.265 ஆக அதிகரித்துள்ளது.. அதன்படி இதில் 1ஜிபி டேட்டாவும் அதிகமாக கிடைக்கிறது.

அன்லிமிட்டெட்
399 ரூபாய் திட்டத்தினை, 479 ரூபாயாக உயர்ந்துள்ளது.. இது 56 நாட்கள் வேலிடிட்டி உடையது.. அன்லிமிடெட் கால் சேவை, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி டேட்டா உண்டு.. 379 ரூபாய் திட்டத்தினை, 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 84 நாட்கள் வேலிடிட்டி உடையது.. இதிலும் அன்லிமிடெட் கால் வசதி உண்டு.. இதிலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இலவச எஸ்எம்எஸ்
அதேபோல, ஏர்டெல் மெகா அறிவிப்பான, ரூ.598 திட்டத்தின் விலையும் இப்போது உயர்ந்துள்ளது.. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.. இதில் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது... இதற்கு ரூ.719 செலவழிக்க நேரிடும்.. டேட்டா டாப்அப் உட்பட மற்ற கட்டணங்களில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது... 698 ரூபாய் திட்டமானது, தற்போது 839 ரூபாயாக உயர்ந்துள்ளது.. இதில் 84 நாட்கள் வேலிடிட், அன்லிமிடெட் கால் வசதி, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதிர்ச்சி
ஏர்டெலலின் இந்த அறிவிப்புதான் அதன் பயனீட்டாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.. கட்டண உயர்வுக்கு முன் அவரவர் ரீசார்ஜ் செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. ஏர்டெல் இப்படி கட்டணத்தை உயர்த்திவிட்டதால், இனி வோடவோன் உட்பட மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications