நம்பிய ஐஸ்வர்யா..துரோகம் செய்த பணிப்பெண்..சிறுக சிறுக திருடி..சொத்து சேர்த்தது எப்படி?

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய வழக்கில் வீட்டுப் பணிப்பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீட்டில் உறவினர்களை விட அதிகம் நம்புவது பணியாளர்களைத்தான். நாம் வேலைக்கு வைக்கும் அந்த பணியாளர்களே நம்பிக்கை துரோகம் செய்யும் போது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறோம். ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டிலும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. நம்பி வீட்டில் விட்ட பெண் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார் ஐஸ்வர்யா. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலை செய்த பெண், பல கோடி மதிப்புள்ள நகைகளை திருடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் திருடு போயிருப்பதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வீட்டின் லாக்கரில் வைரம் , தங்கம் என்று 60 சவரன் நகைகள் இருந்ததாகவும் அவை தற்போது மாயமாகி இருப்பதாகவும் இந்த புகாரில் கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா வீட்டில் இருந்த நகைகள் சிறுக சிறுக திருடப்பட்டுள்ளது. 60 சவரன் நகை மட்டுமல்ல நூற்றுக்கணக்கான சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பது இப்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ்

நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

சினிமாவில் பிஸியான ஐஸ்வர்யா

சினிமாவில் பிஸியான ஐஸ்வர்யா

இருவருமே சினிமாவில் பிஸியாகி விட்டனர். தனுஷ் போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமாக வீடு கட்டி சமீபத்தில் கிரகப்பிரவேசம் நடத்தினார். தனுஷ் பெற்றோர்கள், பிள்ளைகள் மட்டுமே பங்கேற்றனர். லால் சலாம் படத்தில் பிஸியாகி விட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மூன்று வீடுகள் மாறியுள்ளார் ஐஸ்வர்யா.

நகைகள் மாயம்

நகைகள் மாயம்

கடந்த 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை 3 முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயின்ட் மேரி சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என்று லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாக்கரில் இருந்த நகைகள் பற்றிய விவரம் வீட்டில் பணிபுரியும் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் இந்த புகாரை அளித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வேலை செய்த பெண் கைது

வேலை செய்த பெண் கைது

லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் குறித்த விவரம் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்த லாக்கரில் உள்ள 60 சவரன் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிறுக சிறுக திருடிய பெண்

சிறுக சிறுக திருடிய பெண்

ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனைகளை போலீஸ் பார்த்தபோது அதிர்ந்தனர். அதன் மூலம் அவர்தான் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில், திருடிய நகைகளை வைத்து ஒரு கோடியில் சொகுசு வீடு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.3 கோடி நகைகள்

ரூ.3 கோடி நகைகள்

ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் தேனாம்பேட்டை போலீசார் எம்ஜிஆர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் திருடிய 3 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கடந்து 2019 ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விற்பனை செய்து பணமாக மாற்றி வந்திருக்கிறார் ஈஸ்வரி என்பது தெரிய வந்திருக்கிறது.

நகைகள் விற்பனை

நகைகள் விற்பனை

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக ஐஸ்வரியாவின் நகைகளை அவர் திருடியதும், அந்த நகைகளை விற்று கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணத்தை மாற்றி சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரியை கைது செய்துள்ள போலீசார், நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

பல ஆண்டுகள் வீட்டில் வேலை செய்வதால் நமது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களையும், குழந்தைகளையும் நம்பி விட்டு விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது. பணத்திற்கும் நகைக்கும் ஆசைப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் சிறுக சிறுக திருடி சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளார் வேலை செய்த ஈஸ்வரி. நம்பி வீட்டில் விட்ட தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+