Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2000 தடவை கள்ளக்காதலனுடன் பேசிய ஐஸ்வர்யா.. போனில் கேட்ட "பிஸி".. இந்த கணவனுக்குமா இந்நிலைமை, கடவுளே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஹனிமூன் கொலை சம்பவம் போலவே, கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்னொரு பெண், தன்னுடைய கணவரை கொலை செய்திருந்தார்.. அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலத்திலும் 2 நாளைக்கு முன்பு ஒரு கொலை நடந்தது. தற்போது இன்னொரு அப்பாவி நபர், இளம் மனைவியால் பலியாகியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது..

ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்த தேஜஸ்வர் என்பவருக்கு 32 வயதாகிறது.. தனியார் நில சர்வேயராக வேலை பார்த்து வருகிறார்..

Aishwarya cell phone newly wed

இவருக்கு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூரை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது..

ஆனால், திருமணத்துக்கு 5 நாளைக்கு முன்பு ஐஸ்வர்யா மாயமானார்... இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது, கண்ணூரில் செயல்பட்டு வரும் பிரபல வங்கியில் பணிபுரியும் கேஷியருடன் ஐஸ்வர்யாவுக்கு காதல் இருந்தது தெரியவந்தது.. எனவே, கேஷியருன் ஐஸ்வர்யா சென்றிருப்பார் என்று நினைத்து, கல்யாணத்தையும் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர்.

யாரையும் காதலிக்கவில்லை

இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே, ஐஸ்வர்யா திடீரென வீட்டிற்கு வந்தார். தன்னுடைய வருங்கால கணவருக்கு போனை செய்து, "நான் யாரையும் காதலிக்கவில்லை, வரதட்சணையை என்னுடைய அம்மாவால் தர முடியவில்லை.. அவர் படும் அவஸ்தையை சகிக்க முடியாமல், என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றுவிட்டேன், ஆனால், நான் காதலிப்பது உங்களை மட்டும்தான்" என்று கண்ணீர் வடித்து சொன்னார்.

ஐஸ்வர்யா இப்படி பேசியதுமே தேஜஸ்வர் மனம் இறங்கினார்.. தன்னை ஐஸ்வர்யா காதலிப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.. பிறகு இருவருக்கும் கடந்த 17-ம் தேதி திருமணமும் நடந்தது. ஆனால், சில நாட்களிலேயே ஐஸ்வர்யாவின் நடத்தையில் தேஜஸ்வருக்கு சந்தேகம் கிளம்பியது.. தான் வீட்டில் இல்லாதபோது, யாருடனோ மணிக்கணக்கில் ஐஸ்வர்யா பேசி வருவது தெரிந்தது.

பிசி பிசி லைன்

எப்போது போன் செய்தாலும், லைன் கிடைக்காமல் போனதால், இதுகுறித்து தேஜஸ்வர் ஐஸ்வர்யாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா மழுப்பலான பதிலை சொல்லவும் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் 5 நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு போன தேஜஸ்வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் போலீசுக்கு ஓடினார்கள்.. ஐஸ்வர்யா மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்தது அம்பலமானது..

துப்புரவு பணியாளர்

அதாவது, ஐஸ்வர்யாவின் அம்மா கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்திருக்கிறார்.. அப்போதுதான் வங்கியில் கேஷியராக பணிபுரிந்த நபருடன் ஐஸ்வர்யாவுக்கு கள்ளக்தொடர்பு ஏற்பட்டது.. இதனால் அடிக்கடி வீட்டுக்கும் கேஷியர் வந்து சென்றுள்ளார்..

இப்படிப்பட்ட சூழலில்தான், தேஜஸ்வருடன் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது.. அப்போதுகூட, கள்ளக்காதலனுடன் ஐஸ்வர்யா போனில் பேசி வந்துள்ளார்.. தேஜஸ்வர் ஊரில் இல்லாதபோதும், ஆண் நண்பரை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்..

2 ஆயிரம் தடவை போன்

இதுவரை 2 ஆயிரம் தடவைக்கு மேல், கள்ளக்காதலனுடன் செல்போனில் இனிக்க இனிக்க பேசினாராம் ஐஸ்வர்யா.. இதனால் தம்பதிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. அப்போதுதான் தேஜஸ்வரை கொலை செய்ய ஐஸ்வர்யா திட்டம் தீட்டி, கூலிப்படையினருக்கும் பணம் கொடுத்துள்ளார்..

தேஜஸ்வர் சர்வேயர் என்பதால், கூலிப்படையை சேர்ந்தவர்கள், தங்களது நிலத்தை அளக்க வேண்டும் என்று சொல்லி, காரில் தேஜஸ்வரை அழைத்து சென்றுள்ளனர்.. வந்த நபர்கள் நிலம் அளக்க வேண்டும் என கூறி தேஜஸ்வரை காரில் அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அப்போது காரில் செல்லும்போதே கூலிப்படையினர் திடீரென கத்தியை எடுத்து தேஜஸ்வரின் கழுத்தை அறுத்துள்ளனர். .அத்துடன் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொன்றுள்ளனர்.

தாய் மகள் கைது

பிறகு உயிரிழந்த தேஜஸ்வரின் உடலை, பன்யம் அடுத்த சுகாரி மெட்டு பகுதியில் வீசிவிட்டு தப்பியிருக்கிறார்கள்.. இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, இந்த கொலைக்கு ஐஸ்வர்யாவின் அம்மா சுஜாதாவும் உதவி செய்தாராம்...

இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜாதா, ஐஸ்வர்யா என தாய்-மகள் இருவரையுமே ஜெயிலில் அடைத்துள்ளனர். அந்த பேங்க் கேஷியர் இப்போது தலைமறைவாக உள்ளாராம்.. அவரையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. கடந்த 17ம்தேதிதான் திருமணம் நடந்துள்ளது.. அதற்குள் இப்படியொரு கொடுமை நடந்திருப்பது, ஆந்திராவை உலுக்கி எடுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+