நடிகையின் வீடியோ பார்த்து பதறிய அஜித்! இனி சினிமாவுக்கு வரமாட்டாரா? பதில் சொன்ன முக்கிய புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது முதல், சோஷியல் மீடியாக்களில் அஜித் தொடர்பான பேச்சுகள்தான் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகையின் வீடியோ ஒன்றை பார்த்து, அஜித் அடைந்த அதிர்ச்சி குறித்து செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் விரிவாக பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "அசல் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் செய்தியாளர்களை சந்திப்பதையும், தனது படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டார். இது நடந்துக்கொண்டிருந்த அதே காலத்தில், அஜித் கார் பந்தயத்தில் தனது ஈடுபாட்டை அதிகரிக்க தொடங்கினார். இரு தினங்களுக்கு முன்னர் அஜித் சென்ற கார் விபத்தில் சிக்கியபோது தமிழகம் முழுவதும் இருந்த அஜித் ரசிகர்கள் திடீரென பதறிபோனார்கள்.

ajith television

இந்த சம்பவத்திற்கு பிறகு துபாயில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அதில் தான் 18 வயதிலிருந்து கார் பந்தயத்தின் மீது மிக ஆர்வமாக இருந்ததாகவும், இதன் காரணமாக கார் பந்தயத்தில் ஓட்டுவதற்காக பழகிக்கொண்டேன். ஆனால் அதன் பின்னர் சினிமாவுக்கு வந்த பிறகு முழு நேரமாக நான் சினிமாவுக்குள் சென்றுவிட்டேன். இருப்பினும் பந்தயத்தின் மீதான தொடர்பு விட்டு விடக்கூடாது என்பதற்காக கார், பைக் பந்தயங்களில் பங்கேற்று வந்தேன்" என்று கூறியிருந்தார்.

பைக் பந்தயத்தில் மிக அதிக ஆர்வம் கொண்டவராக அஜித் இருந்தார். ஆனால் அவருடைய நலம் விரும்பிகள் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அதனை கைவிட்டு கார் பந்தயத்திற்குள் நுழைந்தார். ஏற்கெனவே பைக் விபத்தில் அவருடைய மூட்டு தனியாக கழன்று வந்துவிட்டது. எனவே 7 மாதம் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். இதனால் அவருடைய முதல் படத்தின் இயக்குநருக்கு படத்தை முடித்து கொடுக்க முடியாமல் போய்விட்டது.

இப்படி இருக்கையில்தான் அஜித் சினிமாவை விட்டு நிரந்தரமாக விலகப்போவதாக பலரும் கூறி வருகின்றனர். தற்போது வெளிவரவுள்ள 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து, இனி அக்டோபரில்தான் திரைப்படங்களில் நடிக்கப்போவதாக அவர் கூறியிருப்பதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். அவர் சொன்னதாக சொல்லப்படும் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு, இனி அஜித் சினிமாவுக்கு 'பை பை' சொல்லிவிடுவார் என வேறு சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால் அஜித் சினிமாவை விட்டு விலகமாட்டார் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். அதாவது, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அஜித் கண்ணில் ஒரு வீடியோ பட்டது. அதில், பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பாலிவுட் நடிகை ஒருவர் திரைப்பட வாய்ப்புகளை இழந்து, அன்றாட வாழ்வுக்கே மிகவும் சிரமப்படுவது தெரிந்திருந்தது. மட்டுமல்லாது அமிர்தசரஸ் பொற்கோயிலில் கோயிலில் வழங்கப்படும் உணவை உண்டு வாழ்ந்து வருவதாக தெரிந்தது.

இதனை பார்த்த மாத்திரத்தில் அவர் உடனடியாக எங்கெங்கோ தேடி பிடித்து, அந்த நடிகையின் தொடர்பு எண்ணை பெற்றிருக்கிறார். அவருக்கு போன் செய்த அஜித், 'உங்களுக்கு என்ன ஆச்சு? உடல் நிலையில் பிரச்சனையா? நடிப்பு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? தென்னிந்தியாவுக்கு வாங்க.. உங்களுக்கான பட வாய்ப்புகளுக்கு நான் ரெகமண்ட் பண்றேன்' என்று கூறியுள்ளார். ஆனால், அந்த வீடியோ போலியானது என்று நடிகை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் அஜித் நம்பமாட்டேன் என்று கூற, போனை கட் செய்துவிட்டு வீடியோ காலில் நடிகை வந்திருக்கிறார். அப்போதுதான் உண்மை அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த நடிகையின் பெயர் 'பிரியா கில்'. தமிழில் அஜித்துடன் 'ரெட்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் இதுவரை எந்த திரைப்பட நடிகரோ, தயாரிப்பாளரோ தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறிய பிரியா, தென்னிந்தியாவில் ஒரே ஒரு படத்தில் உடன் நடித்த காரணத்தால் அஜித் போன் செய்து விசாரிக்கிறார் என்று பிரியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அஜித் நடிப்பை விட்டு வெளியேறுகிறார் எனில், நடிகைக்கு பண உதவி செய்வதாக கூறியிருக்கலாம். ஆனால் அவர் சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தார். இது ஒன்றே போதும் அஜித் எப்படிப்பட்டவர் என்று" என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+