அஜித்த விஜய் பேன்ஸ் காப்பாத்துவாங்க அதுவும் அஜித் பேன்ஸ் கிட்ட இருந்தே சொப்பனத்திலும் கண்டதில்ல சாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதற்கு கார் பந்தய வீரரும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவருமான அஜித்குமார், நன்றி தெரிவித்தார். அஜித்குமார் நன்றி தெரிவித்த நான் முதலே இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இதில் பலர் அஜித் ரசிகர்கள் என்பது ஆச்சரியமானது. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அண்மையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில், தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்திப் பிரிவுகள் கோவையில் இயங்கி வருகின்றன.

Ajith s fans criticize him for thanking tamil nadu chief minister Vijay for sports city

மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் சென்னைக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையிலும், கே.ஏ.ஆர்.ஜே. மோட்டார் ஸ்பீட் வே கோவையிலும், மோட்டார் பந்தயத்திற்கான முக்கிய கட்டமைப்புகளாக உள்ளன. இந்தப் பந்தய அரங்குகளில், தேசிய அளவில் எப்-3, எப்-4 கார் பந்தயப் போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது மோட்டார் வாகனப் பந்தயத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் உலக அளவிலான மோட்டார் வாகன கார் பந்தய விளையாட்டு போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும், அதற்குத் தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்கத் தேவையான சூழல் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளன.

விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்து வரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழ்நாட்டில் புதிதாக வாகன பந்தய நகரம் (மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி) உருவாக்கப்படும். இந்த நகரத்தில் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேசத் தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த "தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்" அமைக்கப்படும்.

இந்த ஒலிம்பிக் நகரம், ஒலிம்பிக் தரத்திலான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகமாக உருவாக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்" இவ்வாறு முதல்வர் விஜய் தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் ,"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாட்டில் அமைய இருக்கும் 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' முன்னெடுப்பிற்கு வாழ்த்துக்கள். தமிழக இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்த்து, அவர்களின் திறமையை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியவை.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அமைய இருக்கும் 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' என்கிற அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

‎‎‎தற்போது நான் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தைகளை சற்றே இங்கு மாற்றி கூற விரும்புகிறேன். 'One small step by the Tamilnadu Government, one giant leap for Indian Motor Sports' (தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல் )‎. தமிழக முதல்வர் மாண்புமிகு சி ஜோசப் விஜய்யின் முயற்சிகள் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மோட்டார் ஸ்போர்ட் சிட்டி உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும்" என அஜித்குமார் கூறியிருந்தார்.

அஜித்குமார் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கைக்கு பின்னர் விஜய்யை பிடிக்காதவர்கள், தங்கள் தலயே இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடலாமா.. இவருக்காக எவ்வளவு சண்டை விஜய் ரசிகர்களுடன் போட்டோம், அஜித் செய்தது பெரிய தவறு என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அஜித்தை வறுத்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர் மாமன்னன் படத்தில் பக்தபாசில், வடிவேலு காட்சிகளை வைத்து எல்லாம் கடுமையான முறையில் விமர்சிக்கிறார்கள். இது ஒருபுறம் எனில், இன்னொரு நெட்டிசன், இந்த பிரச்சனையை திசை திருப்ப, கிளாடியேட்டர் ட்ரெய்லர் வரும் என்று கூறியிருந்தார். அவர் கூறிய மறுநாளே.. அதுபற்றிய அறிவிப்பு வந்தததால், அதனையும் பிடித்துக்கொண்டு அஜித்தை விமர்சிக்கிறார்கள்.

ஒருகட்டம் வரை அமைதியாக வேடிக்கை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித்தின் உண்மையான ரசிகர்கள், இது முற்றிலும் தவறு என்று விளக்கம் அளித்து வருகிறார்கள். கார் பந்தய வீரராக ஸ்போர்ட்ஸ் சிட்டி குறித்த முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். ரசிகர்கள் மன்றமே வேண்டாம் என்று கூறி ஒதுங்கிவிட்ட அஜித்தை, அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் கடுமையாக விமர்சிப்பது தொடர்கிறது.

இதையடுத்து அஜித்திற்கு ஆதரவாக விஜய் ரசிகர்களே களம் இறங்கி கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். அஜித்த விஜய் ஃபேன்ஸ் காப்பாத்துவாங்க அதுவும் அஜித் ஃபேன்ஸ் கிட்ட இருந்தே காப்பாத்துவாங்க னு ... நான் சொப்பனத்திலும் கண்டதில்ல சாரே... என்று தவெகவினர் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+